பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trade

109

tran


 செயல் 2) தொழில் பிரிவு: பொருத்துநர், மின் வேலை யாளர்.

trade agreement — வணிக உடன்பாடு: இருவருக்கிடையே நடைபெறும் வணிக ஒப்பந்தம்.

trade bill - வணிக உண்டியல்: சரக் குகளுக்குப் பணம் கொடுப் பதற்காகப் பணம் மாற்றுண்டி யல்.

trade cycle - வணிகச் சுழற்சி:பா. business cycle.

trade discount – வணிகக் கணக்கு: மொத்த விலையில் விழுக்காட்டளவில் தரப்படும் தள்ளுபடி. பொருளுக்குத் தகுந் தவாறு தள்ளுபடி அமையும். சிறும அளவு 5% பெரும அளவு 40%. மொத்த வணிகர்கள் இதைச் சில்லரை வணிகர் களுக்கு அளிப்பர். சில்லரை வணிகர்கள் பட்டியல் விலைப் படி விற்று ஆதாயம் பெறுவர்.

trade description — வணிக வண்ணனை: சரக்குகளின் சில பண்பியல்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறித்தல். அவற்றின் அளவு, தன்மை, தகுதி முதலியவை பண்பியல்புகள்.

traded option — வணிக விருப்ப உரிமை: பா. option.

trade investment – வணிக முதலீடு: ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குதல். அல்லது அதற்குக் கடன் கொடுத்தல். நோக்கம் வணிக வளர்ச்சி.

trade price – வணிக விலை: சில்லரை விற்பனையாளர் மொத்த விற்பனையாளருக்கு அவர் சரக்குகளுக்குக் கொடுக் கும் விலை. இது கழிவு நீக்கிய சில்லரை விலை,

trade terms – வணிக வட்டம்.பா. trade discount.

trading agency – வணிக முகமையகம்: வணிக முகமை நடைபெறுமிடம்.

trading account – வணிகக் கணக்கு: இலாப நட்டக் கணக் கின் ஒரு பகுதி. இதில் விற்கப்பட்ட சரக்குகளின் செலவு அவற்றின் விற்பனையில் கிடைக்கும் பணத்தோடு மொத்த இலாபம் காண ஒப் பிடப்படும்.

trading profit :வணிக ஆதாயம்: வட்டி, இயக்குநர் கட்டணம், தணிக்கையாளர் கட்டணம் ஆகியவை நீக்கப்படுவதற்கு முன்னுள்ள ஒரு நிறும ஆதாயம.

trading stock –வணிக இருப்பு: பா.stock-in-trades.

transaction – 1) நடவடிக்கை 2) பேரம்.

transaction motive:பேர நோக்கம்.