பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

busi

22

Call


அனைத்துலகக் கடன்களைத் தீர்க்க இவை பயன்படுபவை

business-வாணிபம்:தொழில்,உலோக வாணிபம்,தோல் வாணிபம்

business cycle–வாணிபச்சுழல்: பொருளியலில் தீர்க்கப்படாத பெரும் புதிர்களில் இதுவும் ஒன்று. முதலீடு,ஆதாயம்,விலை முதலியவை இதில் முறையாக ஏறி இறங்கும். இதனால் மலர்ச்சியும் தாழ்ச்சியும் உண்டாகும். பின்னடைவும் மீட்பும் இடைப்பட்ட நிலைகள் பா. accounting cycle.

business name—வாணிபப் பெயர்:ஒருவர் நடத்தும் தொழிலுக்கு இடப்பட்டுள்ள பெயர் எ-டு. திருவள்ளுவர் அச்சகம்,மணிவாசகர் நூலகம்

business plan-வணிகத் திட்டம்:வரையறை செய்யப்பட்ட குறிக்கோள்களை அடைய வகுக்கப்படும் திட்டம். இது நீண்ட காலத்திட்டம்,குறுகிய காலத்திட்டம் என இரு வகை. தொகுதியாகவுள்ள நிறுமங்களுக்கு இது கூட்டுத் திட்டமாக அமையும்

business purchase-account–வணிகக் கொள்முதல் கணக்கு.

business transaction,kinds of-வணிக நடவடிக்கை வகைகள்: 1) தனியாள் கூட்டு நிறுவனம் முதலியவை தொடர்பானவை 2) சொத்துகள்,சரக்குகள் முதலியவை தொடர்பானவை 3) செலவுகள், ஆதாயங்கள் தொடர்பானவை

buyer-வாங்குபவர்:ஒரு பொருளுக்கு விலை கொடுப்பவர்

buyer's market–வாங்குபவர் சந்தை:தேவையை,வழங்கல் விஞ்சும் சந்தை. இதில் விலை குறையும்

buying department–கொள்முதல் துறை:வாங்கும் பகுதி. ஒரு நிறுவனத்திலுள்ளது

by-product–துணை வளைபொருள்:நெல் முதல் விளைபொருள். உளுந்து துணை விளை பொருள். விளைவினால் உண்டாவது

C

cable-கடல் தந்தி:அனைத்துலகத் தொலைவரையம். இதற்குத் தற்பொழுது மாற்று உரு நகலியும் தொலை அதிர்வச்சுமாகும்

calculator–கணக்குப்பொறி:அலுவலகத்தில் அதிகம் பயன்படும் கணக்கிடுங்கருவி பா. computer.

Call-அழைப்பு:தாங்கள் பகுதியாகச் செலுத்திய பங்குகள் தொடர்பாகக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டுமென