பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

custom

40

Debit



custom of the trade – வாணிப மரபு: வாணிபத்தில் தொன்று தொட்டுப் பின்பற்றப்படும் வழக்கம் அல்லது நடைமுறை.

customs and excise – சுங்க ஆயத்துறை.

customs duty - சுங்கவரி: ஆயதுறை வரி.

customs tariff - சுங்கவரி வீதங்கள்: இவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு இன வரியாக விதிக்கபடும் வரியளவுகள்.

D

damages - நட்ட ஈடு:இழப்பு, காயம். ஒப்பந்த மீறல், உரிமை மீறல் முதலியவைகளுக்கு பணமாக ஈடு பெறுதல் இது பல வகை.

datedsecurity — கால பிணையம்: குறிப்பிட்ட மீட்புக்காலம் கொண்ட பங்கு.

day books – நாளேடுகள்: முதல் பதிவேடுகள். ஒரே தொடர் ஆவணங்களைப் பதிபவை. எ-டு. விற்பனை நாளேடு. இடாப்பு விவரங்களைக் குறிப்பது.

days of grace – கண்ணோட்ட நாட்கள்: சலுகை நாட்கள். குறிப்பிட்ட நாள் முடிந்தவுடன் காப்புறுதித் தவணைக் கட்டணம், மாற்றுச் சீட்டுச்செலுத்துகை ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் கூடுதல் காலம்.

dealer - ஈடு(படு)நர்: 1) ஒரு பொருளில் வணிகம் செய்பவர் 2) பங்குச் சந்தையில் முதன்மையாக ஈடுபடுபவர். பா. trader, merchant.

dear money — அரும் பணம்:அதிக வட்டிக்குக் கடன் அளிக் கப்படும் கொள்கை. ஓ.cheap money.

dearness allowance — அக விலைப்படி: விலைவாசி கூடும்பொழுது அதற்கேற்ற வாறு அளிக்கப்படுந் தொகை.

debenture - கடன் ஆவணம்: கடன் பத்திரம். ஒரு நிறுவனம் பணந்திரட்ட வெளியிடுவது. இது பல வகை.

debenture redemption fund— கடன் ஆவண மீட்பு நிதி: இதை உரிய காலத்தில் மீட்க, ஒரு நிறுமம் தன் ஆதாயத்திலிருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை ஒதுக்குதல்.

debit - பற்று: 1) இரட்டை முறைப் பதிவுக் கணக்கில் இடக் கை பக்கமுள்ள பதிவு. ஒரு நிறு வனம் அல்லது ஒருவர் பிறருக்கு அளிக்க வேண்டிய தொகை 2) வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர் பெறுவது அல்லது வங்கி அளிப்பது.

debit balance– பற்றிருப்பு.