பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

defi

42

deposit


deficit financing – பற்றாக்குறை வரவு செலவுத்திட்டம்: பொருளாதரச்செயலை ஊக்குவிக்க, அரசு இத்திட்டத்தை ஆண்டு இறுதியில் அளிக்கும்

deflation -பணச்சசுருக்கம்; "விலை மட்டத்தில் பொது வீழ்ச்சி ஏற்படுதல். பா. disinflation. ஒ.inflation

del credere agent – பிணைய முகவர்: விற்பனை முகவர். தான் விற்கும் பொருள்களுக்குத் தன் முதல்வர் சார்பாகப் பணம் கொடுப்பதாக உறுதியளிப்பவர். இவ்விடருக்காக அவர் கூடுதல் கழிவு பெறுவார்

delegation of authority – அதிகாரம் வழங்கல்: குறிப்பிட்ட பணிகளைச் செய்ய, ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்படுதல்

delivered price – ஒப்படைப்பு விலை: புள்ளி குறித்த விலை. இதில் கட்டி அனுப்புதல், காப்புறுதி, வாங்குபவர் இடத்துக்குச் சேர்ப்பித்தல் ஆகியவை சேரும்

dellvery note - ஒப்படைப்புக் குறிப்பு: வழக்கமாக, இரு படிகளில் அனுப்புபவர், பெறுபவருக்கு அளிக்கும் ஆவணம் பா.advice note

delivery order – ஒப்படைப்பு ஆணை: சரக்கு உரிமையாளர் தான் சரக்கு அனுப்பியவருக்கு அனுப்பும் எழுத்து வடிவ ஆவணம். இவ்வாணையில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அச்சரக்குகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்

demand bills – தேவை உண்டியல்கள்: கேட்பு மாற்றுச் சீட்டுகள்

demurrage - கிடப்புக் கட்டணம்: சுணக்கக் கட்டணம். சரக்குகளை எடுக்கத் தாமதமாகும் பொழுது, அக்காலத்திற்குரிய கட்டணத்தைத் தண்டக் கட்டணமாக வழிப்பட்டியல் கட்டணத்தோடு சேர்த்துக் கொடுத்தல். இது ஊர்திப் பணியில் நடைபெறுவது

department – துறை: புலம்

departmental account – துறை வாரிக்கணக்கு: துறை ஒவ்வொன்றாக எழுதப்படுங்கணக்கு

departmental stores – பல்பொருள் அங்காடி: பல் பொருள் பண்டகச்சாலை. ஒரே சமயத்தில் பல பொருள்களையும் வாங்குமிடமான விற்பனை நிலையம். தேவைக்கேற்ப, இவை தற்காலத்தில் அதிகமாகி வருகின்றன

depletion method – வெறுமையாக்கு முறை: கனிச் சுரங்கச் சொத்துகள் மீது தேய்மானம் நீக்க இம்முறை பெரிதும் பயன்படுவது

deposit - வைப்பு நிதி: வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை