பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

fore

56

for


 foreign bill- அயல் நாட்டு உண்டியல்: அயல்நாட்டிலிருந்து வர வேண்டியது பா. inland bill

foreign exhange – அயல்நாட்டுச் செலாவணி: அயல்நாட்டுப் பணத்தாள்கள். அயல்நாட்டுச் செலாவணிச் சந்தையில் வாங்கப்படுவது; விற்கப்படுவது. அயல்நாடுகளிலிருந்து சரக்குகள் வாங்க இவை தேவை

foreign exchange broker — அயல் நாட்டுச் செலாவணித் தரகர்: அயல் நாட்டுச் செலாவணிச் சந்தையில் அயல்நாட்டுப் பணத்தாள்களுக்கு வங்கிகள் மூலம் ஒழுங்குசெய்து கொடுப்பவர்

foreign exchange dealer — அயல்நாட்டுச் செலாவணி ஈடுநர்: அயல்நாட்டு செலாவணியை வாங்கும் விற்கும் வணிகர்

foreign exchange market – அயல் நாட்டுச் செலவாணிச் சந்தை: அனைத்துலக அங்காடி. இதில் அயல் நாட்டுப் பணத்தாள்கள் வணிகம் செய்யப்படும். இது வணிக வங்கிகள் மூலம் நடைபெறுவது

foreign investment — அயல்நாட்டு முதலீடு: நம் நாட்டில் அயல் நாட்டவர் தம் முதலீடு கொண்டு வாணிபம் நடத்துதல்.இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

foreign sector – அயல்நாட்டுத் துறை: புற வணிகத் தோடும் முதல் புழக்கத்தோடும் தொடர்புடைய ஒரு நாட்டின் பொருளாதாரப் பகுதி. புற வணிகம் என்பது இறக்குமதிகளையும் ஏற்றுமதிகளையும் முதல் புழக்கம் என்பது உள் புழக்கத்தையும் வெளிப்புழக்கத்தையும் கொண்டவை

forgery- கள்ளத்தனம் செய்தல்: மோசடி செய்தல். ஆவணங்களில் நடைபெறுவது. சட்டப்படிகுற்றமானது. கள்ளக்கையெழுத்திடுதலும் இதில் அடங்கும்

forward date — பின்நாளிடல்: ஓர் ஆவணம் எழுதப்பட்ட நாளுக்குப் பின் தேதியிடல். அந்நாளிலிருந்தே அது நடைமுறைக்குவரும்

forward delivery – பின் ஒப்படைப்பு: பிந்திய நாளில் கொடுபட வேண்டும் என ஒப்பந்தம் செய்து பொருள்களை வாங்கல். இது கப்பல் சரக்குகளில் நடைபெறுவது

forward exchange rate – பின் செலாவணி ஒப்பந்தம்: எதிர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் அயற்செலாவணியை வாங்கச் செய்து கொள்ளும் ஒப்பந்தம்