பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

mora

nati

77

 moratorulm- வினை நிறுத்தம்: 1) கடனைத் தீர்க்கக் கொடுப்பவர் வாங்குபவரிடையே ஏற்படும் ஒப்பந்தம் 2) ஒரு நாடு அல்லது அரசு மற்றொரு நாடு அல்லது அரசு தனக்குக் கொடுக்க வேண்டிய கடன் தவணைத் தொகையை நிறுத்திவைக்குங்காலம் 3) அங்காடியில் ஏற்படும் எதிர்பாரா நெருக்கடியினால் எல்லா வாணிபக் கடன்களையும் நிறுத்திவைக்குங்காலம்

mortgage — அடமானம்: வீடு அல்லது நிலத்தை ஈடாக வைத்துக் கடன்பெறுதல். சொத்து வேறாகவும் இருக்கலாம்

mortgagor - அடமானர்: சொத்தின் பேரில் கடன் வாங்குபவர்

mortgagee — அடமானி: சொத்தின் பேரில் கடன் கொடுப்பவர்

mortgage debenture — அடமானக்கடன் ஆவணம்: ஒரு நிறுமத்தின் சொத்தின் பேரில் ஈடாக அதற்குக் கடன் கொடுத்தல்

motion - தீர்மம்: ஒரு நிறுமக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்காக வைக்கப்படும் முன் மொழிவு. அவை ஒப்புக் கொண்ட பின் முடிவாகும். அதாவது, இது தீர்மானத்திற்கு முந்தியது. தீர்மத்தைத் தொடர்வது தீர்மானம்

N

naked debenture-திறந்த கடன் ஆவணம்: ஈடுகாட்டப்படாத பத்திரம்

narration- விளக்கக் குறிப்பு: ஒவ்வொரு குறிப்பேட்டுப் பதிவுக்குக்கீழ், அந்த நடவடிக்கை பற்றிய சிறு விளக்கம் அடைப்புக் குறிப்புகள் எழுதப்படும்

narrow money-குறுபணம்: பரிமாற்றுக் கருவியின் வேலையை நேரடியாகச் செய்யக்கூடிய பண வழங்குகையின் ஒரு பகுதி

national debt – தேசியக்கடன்: உள் நாட்டிலும் வெளிநாட் டிலும் இருக்கும் மைய அரசின் கடன்கள், ஒவ்வோராண்டும் வாங்கப்படும் நிகரக் கடன் தேசியக்கடனில் சேர்க்கப்படும்

national income –தேசிய வருமானம்: மொத்தத் தேசிய விளைபொருள், நுகர்வு, முதலீடு ஆகிய முதன்மையான பெரும்பொருளியல் மாறிகளுக்குரிய புள்ளிகளை வழங்கும் கணக்குகள்

nationalization-தேசியமயமாக்கல்: நாட்டுடமைமையாக்கல். ஒரு நிறுமத்தின் சொத்துகளை நாட்டுக்கு உரிமையாக்குஞ் செயல். இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 14 தனியார் வங்கிகள் நாட்டுடமை