பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

offer

ope

81

கைமூலம் பொது மக்களுக்குக் கடன் பத்திரங்கள் அல்லது புதிய பங்குத்தொகைகள் வழங்கல்

offer document – குறிப்பீட்டு ஆவணம்: ஆவணம் மூலம் செய்யப்படுவது. ஒரு நிறுமப் பங்குதாரர்களுக்கு எடுபேரம் பற்றிய விபரங்கள் அனுப்பப்படுவது

offer for sale – விற்பனை குறிப்பீடு: இடைத்தரகர்மூலம் ஒரு நிறுமத்தின் பங்கை வாங்கப் பொது மக்களுக்கு அழைப்புவிடுதல்

offer price - குறிப்பீட்டு விலை: சந்தையாளர் ஓர் ஈட்டை விற்பனைக்குக் கூறும் விலை

offer to purchase – வாங்கு குறிப்பீடு: பா. taken-Over bid.

official list – அலுவலகப் பட்டியல்: வணிகத்திற்குரிய எல்லா ஈடுகளையுங்கொண்டபட்டியல்

official receiver – பொறுப்பு அலுவலர்: நிறுமக்கலைப்புத் தொடர்பாக உள்ள அதிகாரி

official rate - அலுவலக வீதம்: அரசு அளிக்கும் செலாவணிப் பரிமாற்று வீதம்

olgopoly- சிறுமுற்றுரிமை: ஓர் அங்காடியில் சில விற்பனையாளர்களும் பல வாங்குபவர்களும் இருக்கும் நிலை

on demand – கேட்கும் பொழுது:அளித்தவுடன் கொடுபடுவது மாற்றுண்டியலிலும் பணத்தாளிலும் எழுதப்பட்டிருப்பது

open cheque – திறந்த காசோலை: கீறாக் காசோலை

open Credit – திறந்த கடன்: நம்பகமான வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் வரம்பற்ற கடன்

opening entries – தொடக்கப் பதிவுகள்: அடுத்த ஆண்டு நடவடிக்கைகளைத் தொடங்குகையில் செய்யப்படுபவை. சொத்துகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகப் பற்றுவைக்கப்படும். அதேபோல் பொறுப்புகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக வரவு வைக்கப்படும்

opening prices - தொடக்க விலைகள்: ஓர் ஈடு அல்லது ஏனையவற்றின் பேரில் வணிகம் தொடங்கும் பொழுது கூறப்படும் குறியீட்டு விலையும் பேரவிலையும்

operating costs- நடப்பு செலவுகள் பா. Overhead costs

operating profit- நடப்பு இலாபம்: தன் முதன்மையான வணிகச் செயலின் விளைவாக ஒரு நிறுமம் ஈட்டும் இலாபம். இதற்கு வணிக இலாபத்திலிருந்து வணிக நடப்புச் செலவுகள் கழிக்கப்படும் அல்லது வணிக இழப்போடு நடப்புச் செலவுகள் சேர்க்கப்படும்