பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-سم مسمماصها

வாழ்க்கை - 1 i

வத்ஸ்லே என்பதும், கல்கத்தா யூனிவர்ஸிடியில் பி. ஏ. டிகிரி பெற்றவள் என்பதும், தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் என்பதும், தகப்பருைடைய உத்தி யோகத்தின் பொருட்டு, கீழ் வங்காளத்துக்குக் குடி போனவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதெல்லாம் கூட எனக்கு ஆச்சரியமாயில்லை. இந்த அழகிய பெண்ணுக்கும் அந்தக் குரூபிக்கும் எப்படிக் காதல் பிறந்து கலியாணமும் நடந்தது? இதுதான் எனக்கு விந்தையிலும் விந்தையாகத் தோன்றியது. உலகத்திலே எத்தனையோ அதிசய சம்பவங்கள் கிகழ்வதும், அதற்கெல்லாம் காரணம் உண்டு என்பதும் எனக்குத் தெரியாக விஷயமல்ல. ஆலுைம் இத்தனை செளந்தர்யம் வாய்ந்த ஒரு பெண், பாஷை தெரியாத ஒரு வங்காளிக்காரனே அதிலும் இத்தனை அவலட்சணமானவனே எப்படிக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டாள் என் பதே பெரும் ஆச்சரியமா யிருந்தது.

இந்த விஷயத்தைப் பற்றி இவ்வளவு சீக்கிர மாக அவளேக் கேட்டு விடவும் எனக்குத் தைரியம் பிறக்கவில்லை.

அன்றிரவு சாப்பாட்டுக்கு காங்கள் மூவரும் சேர்ந்தே சென்ருேம். நான் சாப்பிட்ட ரொட்டி, பழங்களுக்கு அவனே பணம் கொடுத்தான். அத் துடன் அவனுகவே என்னைப் பார்த்து, ' எங்கே போய் வருகிறீர்கள் 2:: ... என்று :புன்சிரிப்புடன் அபூர்வமாய் ஒரு கேள்வியைக் கேட்டான்.