பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வத்ஸலயின்

வத்ஸ்லே சற்றுத் தயங்கிள்ை.

அதோ என். கணவர் குழாயடியிலிருந்து வரு கிரு.ர். ஆச்சு, கப்பலும் கரை சோப் போகிறது. அங்கிருந்து ரயில் ஏறி கல்கத்தா போய்ச் சோ வேண்டும். இன்று நாலு மணிக்கெல்லாம் ஊர் போய்ச் சேர்ந்து விடுவோம்: என்ருள்.

அவள் சொன்னபடியே கல்கத்தாவை அடை யும்போது சரியாக மணி நாலு ஆயிற்று. ஸ்டேஷ் னில் வத்ஸ்லேயிடமும், அவள் கணவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ராஷ்பிஹாரி அவென்யூவுக்கு டாக்ஸி பிடிக்கப்போனேன். அந்தச்சமயம் வத்ஸ்லே தன் கணவனிடம் காதோடு ஏதோ சொன்ள்ை.

இதற்குள் விபின் சந்திரர் என்னிடம் வந்து தம்முடைய கார் வந்திருப்பதாகவும் அதில் என்னே நான் போக வேண்டிய இடத்தில் கொண்டு போய் விட்டு விடுவதாகவும் கூறினர். அப்படியே என் னேக் காரில் ஏற்றிக் கொண்டு போய் நான் சேர வேண்டிய இடத்தில் விட்டுச் சென்ர்கள்.

அன்றைய தினம்ெல்லாம் எனக்கு எதிலும் புத்தி செல்லவில்லை. தூக்கமும் வரவில்லை. வத்ஸ்லை யின் அதிசய் வாழ்க்கையைப் பற்றியும், அவளுடைய கணவனைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருந் தேன். இந்த வங்காளிக் கார்னுக்கும் இந்தத் தமிழ்ப் பெண்ணுக்கும் எப்படிக் காதல் ஏற்பட்டது: எப்படிக் கலியாண்ம் கடந்தது என்ற பழைய சிந்த னேயே மறுபடியும் மறுபடியும் தோன்றியது.