பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை - + 25

மனதுக்குப் பிடித்த ஒர் ஆண்மகனே க் தேர்ந் தெடுத்து மணம் செய்து கொண்டாலன்றி இதற்கு விமோசனம் இல்லை என்று எண்ணினேன். ஆல்ை, என்னுடைய காதலைப் பெறுதற்குகுக்த புருஷனத் தேடிப் பிடிப்பது அத்தனே சுலப மாயில்லை. அத்துடன் இந்தக் கல் நெஞ்சக்காாரு டைய எண்ணத்துக்கு விரோதமாகக் காரியம்செய் வதற்கும் திடமில்லை. அப்படிச் செய்வது எனக்கே ஆபத்தாக முடியும் என்று அஞ்சினேன். எனவே, வேருெருவனே மணம் புரிந்து ஆயுள் முழுதும் அவஸ்தைப் படுவதைக் காட்டிலும் விபின்சக்திர ரையே மணந்து கிம்மதியாகக் காலத்தைக் கழித்து விடத் தீர்மானித்தேன். வியின் சந்திரர் அப் போது டாக்டர் தொழில் செய்யவில்லை. ஷேர் மார்க்கெட்டில் கொள்ளே அடித்துக் கொண்டிருந் தார். நல்ல சொத்து இருப்பதாகவும் தெரிவித் துக் கொண்டார். அவருக்கு நான் இல்லாத குறை. தான் பெரும் குறை என்றும், தம்முடைய வாழ்க் கையின் லட்சியமே என்னே.மணப்பது ஒன்றுதான் என்றும் கூறினர். எனவே, விபின் சந்திரரையே மணப்பதென்று முடிவு செய்தேன். பிறகு இரு வரும் மணம் புரிந்தோம். எங்கள் வாழ்க்கையும் இன்பகரமாகவே நடந்து வந்தது. விபின்சந்திர ரைப் பற்றி நான் கொண்டிருந்த எண்ணமெல்லாம் முற்றிலும் தவறு என்பதைப் பின்னல்கான் உணர்ந்தேன். அவருக்கு அழகில்லை யென்றலும் குணத்தில் தங்கக் கம்பியாயிருந்தார்.