பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 @ຄໍrສາກົeo

இத்தகைய மனப்போராட்டத்துடன் வேத

நாயகம் இன்னது செய்வதென்று புரியாமல் சாலை

யோரத்து ஆலமரத்துக் கடியிலேயே வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

வேதநாயகத்தின் கண்கள் எதேச்சையாகச் சாலையிருந்த திக்கை நோக்கியது. ஆகா! இது என்ன ஆச்சரியம் !

வேத நாயகம் யாரைப் பற்றி இத்தனை நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்காரோ, அந்த மகாபாத கன் யாரோ ஒரு ப்ெண்ணுடன் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தான். ஆகா! இக்கனே நேரத்தில் எங்கே செல்கிருன் பக்கத்தில் அவனு டன் குதுகலமாகச் சிரித்துக் கொண்டும் சல்லாபித் துக் கொண்டும் செல்லும் பெண்மணி யார்? அந்தப் பெண்ணின் முகத்தில் இளமையும் அழகும் பொலி வுற்று விளங்கியது. சிரிக்கும் போது அவளுடைய வெண்ணிறப் பற்கள் சந்திர வெளிச்சத்தில் முத்துப் பேர்ல்பிர்காசித்தன. ஒரு வேள்ை ரஞ்சனியா யிருக் குமோ? இந்த எண்ணம் வேதநாயகத்தின் உள்ளத் தில் எழுந்த்போது, அவரைச் சுற்றிலும்எங்கெங் கும் அந்தகாரம் சூழ்ந்தது. பின்னர் ஆயிர மாயிரம் கட்சத்திரங்கள் அவர் தலையைச் சுற்றிக் கிளம்பி மின்மினிப் பூச்சிக்ளப் போல் பறந்து உதிர்ந்தன. ஐயோ!-என்னுடைய மகள் ரஞ்சனியா இப்படிச்

வான கிராதகனிடமா சிநேகம் கொண்டிருக்கிருய்?