பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - வெண்ணிலவில்

ஆலோசனை செய்தார்கள். அந்த ஒன்பது ஜூரர் களில் அடியேனும் ஒருவன். மற்ற எட்டு ஜூரர்க ளும் வேதநாயகம்தான் குற்றவாளி என்று முடிவு செய்தார்கள். என் மனச்சாட்சி மட்டும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே, கான் இதர ஜூரர்

களுடன் தர்க்கம் செய்தேன். -

' கொலை கடந்தது வேதநாயகத்தின் வீட்டு வாசலில் என்பதற்காக வேதநாயகத்தைக் குற்ற வாளி என்று கூறிவிட முடியுமா ? கொலை நடந்த சமயம் யாரும் கேரில் பார்க்காதபோது வேத காய கம் தான் குற்றவாளி என்று எப்படிக் கூறுவது? ஆகையால், அவர் மீது குற்றம் சாட்டுவது சரி யல்ல ’ என்று வாதாடினேன். -

மற்ற ஜூரிகள் என் வாதத்தை ஒப்புக் கொண்ட போதிலும் என் அபிப்பிராயத்துக்கு இணங்கி வரவில்லே.

ஜூரர்கள் ஒரு முகமான அபிப்பிராயத்துக்கு வர வில்லை யென்ருல், அபிப்பிராய ஒற்றுமை ஏற்படுகிற வரை அவர்களில் யாரும் அறையை விட்டு வெளியே போகக் கூடாது ' என்பது கோர்ட் விதிகளில் ஒன்று.

எனவே, நான் மட்டும் கணிப்பட்ட அபிப்பிரா யம் கூறுவதால் பிரயோசனமில்லை என்று தெரிந் ததும் நானக்வே மற்ற ஜூரர்களுடன் ஒத்துப் போய்விட்டேன்.

வழக்கு முடிந்த தீர்ப்பும் அளிக்கப்பட்டது.