பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண் வதந்தி

இந்த யுத்த காலத்தில் எத்தனையோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. அப்படிப் பட்ட ஆச்சரியங்களில் சென்னைப் பட்டணத்தில் எழும்பூர் “ஸ்பர்டாங்க் ரோடிலிருந்த ஒரு வீடு ஒன் றரை வருஷ காலமாகப் பூட்டிக் கிடந்ததும் ஒன் ருகும். குடியிருக்க வீடு கிடைக்குமர் என்று எத் தனேயோ பேர் திண்டாடித் தெருவில் கிற்கும் இந்த நாளில் மேற்படி வீட்டுக்கு யாருமே குடி வராமல் இருந்தது பெரிய ஆச்சரியமே யல்லவா ? இதற்குக் காரணம் ஒரு மர்மமாகவே இருந்தது, எத்த னேயோ பேர் மேற்படி வீட்டைப் பார்க்க வ்ருவதும் கட்டிடத்தின் அமைப்பையும், அதைச் சுற்றியிருந்த தோட்டத்தின் அழகையும் கண்டு மயங்கிப் ப்ேரவ தும், கடைசியில் ஏதோ ஒரு விஷயத்தைக் கேட்டு விட்டு, ! நமக்கு வேண்டாம் இந்த வீடு * என்று சொல்லிவிட்டுப் போவதும் வழக்கமாயிருந்தது.

வீடு பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. சிமெண்டு கட்டிடம். கட்டிடத்தைச் சுற். றிப் பெரிய காம்பவுண்டு; காம்பவுண்டுக் குள்ளிருந்த வேப்ப மரங்களும், புஷ்பச் செடிகளும் முல்லைக் கொடிகளும் ந்ேதவனம்போல் காட்சியளித்தன.

இந்த வீட்டுக்கு எதிரில் கூப்பிடு தாத்தில் இன்ைெரு வீடு இருந்தது. அதில் குடி யிருந்திவர்