பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நாள் பால்காரி சகோதரிகளிடம் வந்து, தினமும் அந்த அம்மாள் காலேயில் எருமைப் பாலும் சாயந்திரம் பசும்பாலும் வாங்குவதாகச் சேதி சொன்னள். இந்த விவரத்துக்கு மேல் பால் காரியால் ஒன்றும் கூற முடியவில்லை. இதிலிருந்து சகோதரிகள் என்னத்தை ஊகித்தறிவது ?

எந்த ஊர் என்று கேட்டாயோ?” என்று.

பத்மாவின் தாயார் ஆவலோடு விசாரித்தாள்.

'திருச்சினப்பள்ளியாம்' என்று பால்காரி பதில் கூறினள். -

அவளுக்குக் காயார் க. பனர் இருக்கிறர் களா?”

'அது எனக்குத் தெரியாதம்மா, கேட்டால் ஒன்றும் பதிலே பேசுவதில்லை. பேச்சு ரொம்ப ரொம்பக் கணக்க்ாயிருக்கு" என்றுள் பால்காரி.

நாளடைவில் எதிர் வீட்டுத் தம்பதிகளின் மீது பத்மாவின் தாயாருக்குச் சந்தேகம் வலுக்க ஆரம் பித்தது. அதற்குத் தகுந்தாற்போல் இவளுடைய காகில் பாாபரியாய் ஒரு சேதியும் விழுந்தது. அந்தச் சேதி இதுதான்:- - . . -

திருச்சினப்பள்ளியில் ரங்கசாமி ஐயங்கார் என்ருெரு ரிடயர்டு வக்கீல் இருக்கிருர். அவ ருக்கு இரண்டு பெண்கள். இரண்டு பெண்களும் காலேஜில் படித்தவர்கள். அந்தப் பெண்களில் ஒருவள்தான் இப்போது, எதிர் வீட்டுக்குக் குடி, வந்திருக்கிருள். இவள் காலேஜில் வாசித்துக்