பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア2 - எதிர்

அவனுக்குப் பத்து அல்லது பதிைேரு வயது இருக் கும். சிறு வயதிலேயே பெற்ருேரை இழந்து விட் டான். ஜயந்தியின் அடுத்த வீட்டில் தான் அவனு டைய மாமா வசித்து வந்தார். வாசுதேவனுடைய மாமா தமக்குக் குழந்தைகள் இல்லாத குறையை வாசுதேவனே வளர்ப்பதன் மூலம் போக்கிக் கொண்டார்.

வாசுதேவன் அடிக்கொரு தடவை ஜயந்தியின் விட்டுக்கு வந்து போனன். வந்து, சிறு குழந்தை யான சூடிக்கு விளையாட்டுக் காட்டுவான் ; தொட் டிலில் போட்டு ஆட்டுவான். கையில் எடுத்துக் கொஞ்சுவான்.

ஜயந்தியின் தகப்பருைக்கு அந்தப் பையனி டம் தனிப்பட்ட அன்பு இருந்தது. ஐயோ பாவம்! தாயில்லாப் பையன் ' என்று அங்தப் பையன் மீது கருண் காட்டுவார்.

வாசுதேவனுக்குப் பதினேந்து வயதானதும் அவனுடைய மாமா அவனே டாக்டர் படிப்புக்காக வெளியூருக்கு அனுப்பிவிட்டார். எனவே அதற்குப் பிற்கு அவனல் ஜயந்தியை அடிக்கடி பார்க்க முடிய வில்லை. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வருவான். மறு நாளே திரும்பிப் போய் விடுவான். இப்படி இரண்டு மூன்று வருஷங்கள் கழிந்தன.

வரவர வாசுதேவனுடைய கடையுடை பாவனை களில் மாறுதல் காணப்பட்டது.