பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?6 - எதிர்

இத்தனை சிவப்பா யிருக்கின்றன ?' என்று கவலை யுடன் கேட்டாள். - -

ஜயந்தி ஏதோ பதில் கூறி மழுப்பி விட்டாள். சூடாமணி. இதை உண்மை யென்று நம்பினள். வாசுதேவன் உண்மையில் யாரை அதிகமாக நேசிக்கிறன் என்பதை ஒருவராலும் ஊகித்தறிய முடியவில்லை.

கடைசியில் ஜயந்தியின் குழப்பம் ஒருவாறு தீர்ந்தது. அவளுடைய சிற்றன்னே இறக்கும் சமயம் குழந்தையைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் அவளுடைய இருதயத்தில் எதிரொலி செய்தன. -

"ஜயந்தி, இந்தக் குழந்தையை கான் எத்தனை அன்பாக வளர்ப்பேனுே, அவ்வாறே நீயும் காப்பாற்ற வேண்டும்.” ஜயந்திக்கு இந்த வார்த்தைகள் ஞாபகம் வந்த தும் சூடியின் மீதிருந்த கோபமும் வருத்தமும் மறைந்து அன்பும் ஆசையும் தோன்றின.

அதே சமயத்தில் உள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சூடாமணி தன்னுடைய தவருன செய்கையைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண் டிருந்தாள். தன் காயைப்போல் இருந்து வரும் ஜயந்தியின் மீது அவளுக்கு அளவிலாத அனுதா பமும் வாஞ்சையும் ஏற்பட்டது. அவளுடைய விருப் பத்துக்கு மாருகத்தான் வாசுதேவனுடன் பழகு வதை விட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்தாள்.