பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராதது ァァ

உடனே, வாசுதேவனிடம் சென்ருள். சூடா மணியைக் கண்டதும் அவன் ' எங்கே வங்காய் ?" என்று கேட்டான்.

சூடாமணி கான் வந்த விவரத்தைச் சொல்வி கன்னே அடியோடு மறந்துவிட வேண்டும் என்று வாசுதேவனே வேண்டிக் கொண்டாள். --

"மறந்து விட்டு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் வாசுதேவன். -

ஜயந்தியை மணந்து கொள்ள வேண்டும் " என்ருள் சூடி.

" உன்னே மறப்பது; ஜயந்தியை மணப்பது; இரண்டுமே நடக்காத காரியம்!” என்ருன் வாசு தேவன். சூடாமணி பதில் பேசத் தெரியாமல் திகைத்தாள். - - - அவள் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்துக் கெல்லாம் வாசுகேவனைத் தேடி ஜயந்தி வந்து சேர்க்காள். அவள் முகத்தில் என்றைக்கும் இல் லாத சோகம் குடி கொண்டிருந்தது. வாசுதேவன். ஜயந்தியைக் கண்டதும் நீ வந்திருக்கிற காரியம் எனக்குத் தெரியும்” என்றன்.

ஜயந்திக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன தெரியும்?' என்று கேட்டாள்.

" உன்னே மறந்துவிட்டு சூடாமணியை மணக்க வேண்டும் என்று கேட்கத்தானே வந்திருக்கிருய்?" என்று கேட்டான். - . .