பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வனதேவியின் மைந்தர்கள்

நிற்கிறது; குதிரைகள் கனைக்கின்றன. சுமந்திரர் தட்டிக் கொடுக்கிறார்.

“பிள்ளைகளா, பக்கத்தில் தங்குமிடம் இருக்கிறதா?”

“இருக்குங்க மகாராசா! நேராகப் போனால் சாமி ஆசிரமங்கள் இருக்கும்....”

வேடர் குடிமகன் ஒருவன் விரைந்து வருகிறான்.

‘சாமி, வாங்க... நம்ம பக்கம் நல்ல இடம் இருக்கு ரா, தங்கி, இளைப்பாறிப் போகலாம்....”

குதிரைகள் மெதுவாகச் செல்கின்றன. முட்டு முட்டாக வேடர் குடில்கள். மரங்களில் தோல்கள் தொங்குகின்றன. நிணம் பொசுங்கும் வாடை... பறவை இறகுகளின் குவியல்கள்.... கண்டியைப் போல் ஒரு குழந்தை அம்மணமாக வருகிறது.

தேரைக் கண்டதும் நாய்கள் குரைக்கின்றன.

தீப்பந்தங்களுடன் பலர் வருகின்றனர். தேர் நிற்கிறது.

பூமகளை ஒரு வேடுவ மகள் கை கொடுத்து, அனைத்து இறங்கச் செய்கிறாள்.

“மகாராணி வாங்க! அடிமை ரீமு நான்...”

தீக்கொழுந்தின் வெளிச்சத்தில், அவள் முன் முடி நரைத்து, முன்பற்கள் விழுந்து கோலம் இணக்கமாகத் தெரிகிறது.

“என்ன சந்தோசமான ராத்திரி... மகாராணி...”

மெள்ள அனைத்து அவளை நடத்திச் செல்கிறார்கள்.

பந்தங்கள் வழி காட்டுகின்றன. ஆடுகள் கத்தும் வரவேற்பொலி குலவையிடும் வரவேற்பு.

தோலாடை விரிப்பில் அமர்த்துமுன், குடுவையில் நீர் கொண்டு வருகிறார்கள் பெண்கள். இருளில், சுளுந்து வெளிச்சங்களில் இணக்கமான அன்பு முகங்கள்... கால்களைக்