பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வனதேவியின் மைந்தர்கள்

தவிர, அணிகளில்லாத நிலையில், அந்தக் கோமகள் கருவுற்ற நிலையில், அற்பமான இன்னல்கள் என்று அவற்றை வென்ற வண்ணம் நடக்கிறாள். வழியில் வேடர் குடில்கள் வருகின்றன.

அவர்கள் இந்தப் பூமகளுக்கு மாற்று மரவுரிகளும் தோலாடைகளும் தருகிறார்கள். பட்டாடைகள் துய்மை பெற்று, மீண்டும் அவள் இடையில் இசைகின்றன. “உங்களுக்கெல்லாம் நான் ஆடைகள் எடுத்து வைத்தேன். என் விதி இப்படி ஆயிற்றே” என்ற சோகம் முகசந்திரனின் நிழலாகப் படிகிறது.

அவர்கள் பதமான இறைச்சி உணவும், இலுப்பைப் பூவின் மதுவும் தருகிறார்கள். அவள் இன்ன உணவென்று தெரியாமலே அவற்றைக் கொண்டு, களைப்பும் சோர்வும் மாறுகிறாள். பிரியா விடைபெற்று, தாயை, தன் தாயிடத்தைக் காண மீண்டும் பயணம் புறப்படுகிறாள்.

வானளாவும் மரங்கள். பெரிய பெரிய இலைகள். சுற்றிச் கற்றிக் கொடிகள். மூலிகை மணங்கள். புற்றரையில் குளிர்ச்சி படிந்திருக்கிறது.

அங்கிருந்து பார்க்கையில், ஏதோ நிலத்தில் கருமேகம் படை திரண்டு வந்தாற்போல் தோன்றுகிறது.

அங்கேயே நின்று உற்றுப் பார்க்கிறாள்.

அது யானைக் கூட்டம். தலைவன் குஞ்சு குழந்தைக் குடும்பங்கள் ஆண், பெண் என்று செல்கின்றன.

அமைதியாக அவை செல்வதைக் கண்டு அவள் வியப்படைகிறாள். இவை எத்துணை ஒற்றுமையாகச் செல்கின்றன? முன்னால் செல்லும் யானை தும்பிக்கையில் தான் செல்லும் இடம் - தரைப்பகுதி உறுதியுடன் கூடிய நிலமா, அல்லது, பத்திரமில்லாமல் கால் வைத்த உடன் உள்ளே இழுக்கும் பொறியா என்று சோதிப்பது போல் பார்த்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறாள்.

“மனிதர். அதுவும் மன்னர்கள் எத்துணை கொடியவர்கள்! இந்த விலங்குகளைத் தந்திரமாகப்பிடித்து, இவர்களுடைய மண்ணாசைக்குப் பலியாக, போரிடப்பழக்குகிறார்கள்.மதுவைக்