பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

வனதேவியின் மைந்தர்கள்


“புள்ளங்களுக்கு என்ன தெரியும்? அது கத்துறது வேடிக்கையாக இருக்கும்.”

பூமகள் விருவிரென்று புதர்கள் கடந்து செல்கிறாள். குயில் கூட்டத்தில் பட்ட காக்கைகளா அவள் பிள்ளைகள்? இங்குப் பொருந்தாத பிள்ளைகளா?. எது குயில் கூட்டம், எது காக்கைக் கூட்டம்? குயிலுமில்லை, காக்கையுமில்லை. கூடித்திரியவித்து! மேல் குல வித்து’ என்று அவள் இதயத்தில் அடிவிழுவது போல் பெரியன்னையின் சுடுமொழி சுடுகின்றது.

வாயைக் குவித்துக் கொண்டு, “சம்பூகா’ என்று கத் துகிறாள். அன்று துன்பம் அவளைச் சூழ்ந்து கவ்வியபோது நந்தசுவாமியை நினைத்தபோது வந்தாரே, அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக் கொள்கிறாள். மனதின் ஒரு பக்கம் அந்தப் பறவையின் இதயம் துடிப்பது போல் உணர்வு படிகிறது.

“சம்பூகா. எங்கிருந்தாலும் வா!.”

விர்ரென்று ஒரு சாரல் விசிறியடிக்கிறது.உடல் சிலிர்க்கிறது.

பறவை அடிப்பட்டதைவிட, அந்த இளங்குறுத்துகளின் செய்கை அவளை அதிகமாக நோக வைக்கிறது. கூடித்திரிய வித்து!. கொலைக்கு நியாயம் கற்பிக்கும் அறிவு இந்த மதலைக்கு வளரும். இப்போது அந்த அறிவு இல்லை.”

எங்கிருந்தோ குழலோசை கேட்கிறது. மனசில் தெம்பு தலைதுாக்குகிறது. சுரங்கள் புரியாத இசை. ஆம், இது கண் பார்வையில்லாத முடியில் ரோமம் இல்லாத, ஒரு சிறுவன். அவனுக்கு இவள் மாதுலன் என்று பெயர் வைத்திருக்கிறாள். “மாதுலன்! மாதுலா? சம்பூகனைக் கண்டாயா?”

“இதோ இருக்கிறேன், வனதேவி?.”

“எங்கே?.”

புதர்களுக்குள்ளிருந்து வெளிப்படுவதுபோல் வெளிப்படுகிறார்கள்.

மாதுலன் ஊதுகிறான்.