பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

153


சம்பூகணின் கையில் ஒரு நாய்க்குட்டி

“சம்பூகா? அது நாய்க்குட்டியா?. வாலும் முகமும்.”

வால் அடர்ந்தாற்போல் இருக்கிறது. கண்கள் சிறு கங்கு போல் தெரிகின்றன. முகத்தில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.

“இது நாயா?.”

“தெரியவில்லை வனதேவி. ஏதோ பிராணி கடித்துக் கழுத்தில் காயம். பச்சிலை போட்டேன். வனதேவி, என்னைக் கூப்பிட்டீர்களே?.”

“வா, உனக்கு ஒரு வேலை இருக்கிறது.”

அவன் வரும்போது மாதுலன் ஊதிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறான்.

அந்தப் பிராணி செவிகள் நிலைத்திருக்க அந்த ஒசையைக் கேட்பது போல் இருக்கிறது.

அவள் முகமலர்ச்சியுடன் விரைந்து வந்து நீண்ட கொட்டகையில் கூடையில் வைத்த கரும்பறவையைக் காட்டுகிறாள்.

சம்பூகன் அங்கே அந்த நாய்க்குட்டியை வைத்துவிட்டு, விரைந்து செல்கிறான். அந்த நேரமெல்லாம் மாதுலன் குழலூதிக் கொண்டிருக்கிறான்.

அப்போது, சோமா இரண்டு குழந்தைகளையும் அங்கே கொண்டுவந்து உட்கார வைக்கிறாள். மாதுலன் ஊதுவதை இரண்டும் அசையாமல் பார்க்கின்றன. பூமகள் மெய்ம்மறந்து போகிறாள். “மாதுலா, இந்தப் பிள்ளைகளின் பக்கம் வந்து ஊதுகிறாயா? எவ்வளவு சுகமாக ஊதுகிறாய்? உன் இதயத்து ஏக்கமல்லவா, இப்படி ஒலிக்கிறது? உயிர்கள் அனைத்தையும் அணைக்கும் ஏக்கமா இது? முடியில் ரோமமில்லாத பார்வையற்ற ஒரு சிறுவன். இவனை அரசகுலத்தவர், முகத்தில் விழிக்கக்கூடாத அபாக்கியவான் என்று இகழ்வார்கள். ஆனால், இவன் வணக்கத்துக்குரியவன். இந்தக் குழலை இவன் வாயில் பொருத்தி,