பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வனதேவியின் மைந்தர்கள்


“கண்ணம்மா, உனக்கு அரண்மனையில் தங்கத் தொட்டிலில் பஞ்சணையில், பணிப்பெண்கள் கொஞ்சித் தாலாட்டுப் பாட அரையில் கிண்கிணியும், முடியில் முத்துச்சரமும் கைவளை, கால் சதங்கை குலுங்க, இந்தப் பிள்ளைகள் வளர வேண்டியவர்களாயிற்றே, காட்டு வேடர்களிடையே, இப்படி வளர்கிறார்களே என்ற வருத்தம் இருக்கிறதா அம்மா?” இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திராத பூமிஜர் ஒரு கணம் திகைக்கிறாள்.வினோதமான உணர்வுகள் அவள் நெஞ்சுக் குழியில் திரண்டு வருகின்றன அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

“நீ குழந்தை பெற்ற நாள் காலையில் அவன் இங்கு வந்தான்” பெரியன்னை தக்ளியை உருட்டியவாறு, அவளை நிமிர்ந்து பாராமலே மெதுவாகச் சொல்கிறாள்.

திடுக்கிட்டவளாக பூமகள் அவளை ஏறிட்டு நோக்குகிறாள் அவன் என்றால், யார்? மன்னரா? இளவரசா? அன்று யாரோ படைகொண்டு செல்கிறார், பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள் என்று செய்தி கொண்டு வந்தார்களே? அதெல்லாம் உண்மையா? வினாக்கள் எழும்புகின்றன. ஆனால் அவள் நாவில் உயிர்க்கவில்லை.

“அவன்தான், இளைய மைத்துனன், அசுரன் யாரையோ கொல்ல, மகுடாபிஷேகம் செய்து கொண்டு போகும் வழியில் இங்கே பெண்கள் குலவையிட்டு சோபனம் பாடினார்களாம் யாருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டு வந்தான் காட்டில் யாருக்கோ குழந்தை பிறந்தால் யாரோ இளவரசனுக்கு என்ன வேலை? போய் வா!” என்றேன்.

“நான் கோசலநாட்டு இளவரசன்.இங்கே வனதேவி பிள்ளை பெற்றாள் என்று பாடினார்களே” என்றான். எந்த இளவரசனுக்கும் இங்கே ஒரு வேலையுமில்லை, மூக்கை நுழைக்க இந்தப் பூச்சிக் காட்டுக்குடிமக்கள் நச்சம்பு விடுவார்கள். உங்கள் ஜிரும்ட காஸ்திரங்கள் இங்கு பலிக்காது. இந்த மண் உங்களை ஏற்காது உடனே இந்த இடத்தைவிட்டுப் போ. ஏதேனும் விபரீதம் நிகழ்ந்துவிடும் என்று எச்சரித்தேன்” என்று அமைதியாகப் பேசும்