பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

157

பெரியன்னையைப் பார்த்த வண்ணம் அவள் சிலையாக நிற்கிறாள்.

“நீ அப்போது உறக்க மயக்கத்தில் இருந்தாய். அவர்கள் ஏதோ எச்சிலைத் துப்புவது போல் துப்பியபின், இங்கென்ன வேலை? இப்போது அந்த அரசுப் போகமும் மன்னர் உறவுகளும்நீ துப்பிய எச்சில் கண்ணம்மா”

அவளுக்கு ஏனோ தெரியவில்லை. உடல் நடுங்குகிறது.


16

சங்கொலி தீர்க்கமாகக் கேட்கிறது. டமடமடம வென்று பறை கொட்டும் இணைந்து கேட்கிறது.

“என்ன சமாசாரம்? ஏதேனும் புலியைக் கொன்றார்களா? காட்டுப் பன்றி வீழ்ந்ததா? விருந்துக் கொட்டா? வெற்றி விழாவா? எதற்கு இப்படிக் கொட்டுகிறார்கள்?.”

பெரியன்னையில் முகத்தில் ஒருபுறம் மகிழ்ச்சியொலி: ஒருபுறம் வெறுப்பு நிழலாடுகிறது. காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“இவர்கள் சந்தோசம் தலைகால் புரியவில்லை என்றால் பறை கொட்டித் தீர்த்து விடும்.”

அருகே ஆரவாரங்கள் வருகையில், கார்காலம் முடிந்தபின், பசுமையில் பூரித்துத் தாய்மைக் கோலம் காட்டும் இயற்கை யன்னையின் மாட்சி கோலோச்சும் சூழல் வரவேற்பளிக்கிறது.

“வாழ்க சத்திய முனிவர் வாழ்க! நந்தபிரும்மசாரி வாழ்க!” தலைமேல் வாழைக்குலைகள் தெரிகின்றன. கருப்பந்தடிகள்: கனிகள், தானிய கூடைகள்.

ஒ. நந்தசுவாமியின் ரீம். ரீம் சுருதி ஒலிக்கிறது. பூமகள் விரைந்து அவர்களை எதிர்கொள்ளச் செல்கிறாள்.

நந்தமுனி - உயர்ந்து உலர்ந்த மேனியுடன் . அருகே