பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

161

கொள்கிறார்கள். போட்டியும் பொறாமையுமாக நஞ்சை வளர்த்துக் கொள்ளும் பெண்- ஆண் உறவுகள் இல்லை என்று காண்கிறாள். ‘நச்சுக் கொட்டை'கள் இருந்தன. அதை அவர்கள் தங்கள் சமுதாயத்தை அடிமையாக்காமல் காத்துக்கொள்ளவே பயன்படுத்தினார்கள். சத்தியமுனியின் வெளிச்சத்தில், அந்த அச்சமும் கரைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மாதுலனை வாருணி அழைத்து வருகிறாள். அவள் அவன் தமக்கை சிறுவனை அழைத்து முனிவர் அருகில் இருத்திக் கொள்கிறார். பிறகு அவன் கைக் குழலை வாங்கித் தம் இதழ்களில் வைத்து ஊதி ஒலி எழுப்புகிறார். நாதஒலி, ஓம் என்ற ஓசை போல் சுருள் அவிழ மெல்ல ஒலிக்கிறது! அப்போது, வனதேவியின் இரு பிள்ளைகளும் ஓடி வந்து முனிவரிடம், எனக்கு, எனக்கு என்று அந்தக் குழலைக் கேட்கிறார்கள்.

மாதுலனின் கச்சையில் இன்னமும் இரண்டு குழல்கள் இருக்கின்றன. முனிவர் அவர்கள் இருவரையும் தம் இரு மருங்கிலும் அமர்த்திக் கொண்டு குழல்களைக் கொடுக்கிறார்.

அவர்கள் இதழ்களில் வைத்து ஊதத் தெரியாமல் உண்ணும் பண்டம் போல் ரசிக்கிறார்கள்.

எல்லோருக்கும் சிரிப்பு வருகிறது.

சத்தியமுனிவர் அதை வாங்கி ஊதிக் காட்டுகிறார்.

உடனே பிடித்துக் கொண்டு இருவரும் வினோதமான ஓசைகளை எழுப்பி முயற்சி செய்கிறார்கள்.

பூமகள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறாள்.

“சுவாமி! இந்தப் பிள்ளைகளைத் தாங்கள் ஏற்று, பூமியின் மைந்தர்கள் ஆக்க வேண்டும். வில்-அம்பு என்ற உயிர்வதைக் கருவிகளை இவர்கள் ஏந்துவதைவிட, இவ்வாறு இசைபாடும் பாணராக சுதந்தர மனிதர்களாக உலவ வேண்டும். அன்றாட நியமங்களில் ஆதிக்கங்களும், கொலைச் செயலும் தலைதுாக்கும் சூழல் இவர்களுக்கு அந்நியமாகவே இருக்கட்டும்... இங்கே, பச்சை மரங்களை யாரும் வெட்டுவதில்லை. வனவிலங்குகள் கூட இங்கே

வ. மை. - 11