உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

203

போட்டுது. தோலைக் கொண்டு குடுத்திரே, பானையிலே கூழுபண்ணுவோம், புளிக்க வைப்போம். இந்தக் காசில என்ன பண்ண? வேதவதியில் கொண்டு வீசுன்னு கத்தினாங்க.”

“ராசான்னா தங்கக் காகங்கதா சாப்புடுவாங்களா?

ஒரு பொடிப்பயல் மென்று ‘அம் அம்’ என்று உண்பதைப் போல் கேலி செய்கிறான். எல்லோரும் அதையே செய்து சிரிக்கிறார்கள்.

“அப்பாடா..” என்று விஜயன் வயிற்றைத் தடவி ஏப்பம் விடுகிறான்.

அப்போதுதான் அவள் அங்கு இருப்பதைப் பிள்ளைகள் பார்க்கிறார்கள்.

மரங்களில் உள்ள பிள்ளைகள் அவளை வந்து சூழ்கிறார்கள். “அம்மா . நாங்கள் அந்தக் குதிரையைப் பார்க்கப் போகிறோம்! இதோ இந்த மாயன் பார்த்து விட்டானாம். கதை கதையாகச் சொல்கிறான். வெண்மையாகப் பால்துரைபோல் இருக்கிறதாம். கறுப்பு மூக்காம். பச்சைப் பசேலென்று மொத்தை மொத்தை யாகச் சாணி போடுகிறதாம்!” என்று விஜயன் இரு கைகளாலும் அதன் அளவைக் காட்ட கொல்லென்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.

“எங்கே இருக்கிறதாம், அது?

“வேம்பு வனத்து அருகே புல்தரையில் மேய்கிறதாம்.”

“அதன் பின் யாரும் உரியவர்கள் வரவில்லையா?”

“யாரும் இல்லை வனதேவி. அவர்கள் அந்தக் குதிரையை அதன் கால்போன போக்கில் மேய விடுவார்களாம். அது தடம்பதித்த இடமெல்லாம் அரசருக்குச் சொந்தமாம்”

“அதெப்படி நாம் நடக்கும் இடத்தை அவர்கள் சொந்த மாக்கிக் கொள்ள முடியும்? நாம் இங்கே நடமாடுகிறோம்; உணவு சேகரிக்கிறோம்; படுத்து உறங்குகிறோம். இது வனதேவிக்கு உரிய