பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

வனதேவியின் மைந்தர்கள்


“எனக்கு அந்தக் குதிரையில் ஏறி இந்தப் பூமண்டலம் முழுதும் ஒரு சுற்று சுற்றி வரவேண்டும் என்று தோன்றுகிறது.” என்று விஜயன் வழியில் பட்ட கருப்பந்தடிகளை உடைத்துக் கொண்டு கூறுகிறான்.

கரும்புத் துண்டுகள் கடிபடுவது போல், குதிரை பற்றிய கற்பனைகளும் சுவைக்கப்படுகின்றன. “ஒருகால் மாயன் சொன் னாற்போல் அது பறந்து அக்கரை போய்விட்டிருக்கும்!”

“அதெல்லாமில்லை, இவர்கள் அப்படியே துங்கி, கனவு கண்டிருப்பார்கள். குதிரை துரத்தி வருவதாக நினைத்துத் தேனெடுக்காமல் ஓடி வந்திருப்பார்கள்!”

‘இல்லை அஜயா? நாங்கள் இரண்டு கண்களாலும் பார்த்தோம்! அது உதைத்ததில் எனக்குப் பாரும், காயத்தை’

ஒரு கால் இங்கே வரவேற்பு இருக்காது என்று ஆற்றின் மேல் பறந்து அது மிதுனபுரிப் பக்கம் போயிருக்கும்!”

“அங்கே தமனகனோ, சரபனோ உள்ளே விடாமல் கோட்டைக் கதவுகளை அடைத்திருப்பார்கள். அது அவ்வளவு உயரக்கோட்டைச்சுவர் மேல் பறக்க முடியுமா?. அப்படி உள்ளே போனால், தேவதைக்குப் பலியாகும்!” நந்த முனி ஒற்றை நாண் அதிரும்படி மீட்டுகிறார்.

“பிள்ளைகளே, இந்தக் குதிரைப் பேச்சைவிட்டு இப்போது எல்லோரும் பாடிக்கொண்டே நம் இருப்பிடம் போகலாம்! இந்தக் காட்டுக்கு எத்தனையோ பேர் நமக்கு நண்பர்களாக வருகிறார்கள். அப்படி அதுவும் வந்து விட்டுப் போகட்டுமே?. பாடுங்கள். அவர் ஒற்றை நாணை மீட்கிறார்.

          “வனதேவி பெற்ற மைந்தர்கள் யாம்.
          அவள் மடியில் நாங்கள் வாழ்கின்றோம்”

ஏற்றமும் இறக்கமுமாகக் குரல்கள் ஒலிக்கின்றன.

          “தன் தானியங்கள் அவள் தருவாள்!
          தளரா உழைப்பை யாம் தருவோம்!