பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

237

குழலை அவன் கையில் ரெய்கி கொடுக்கிறாள். அவன் மறுக்கிறான். கண்களில் இருந்து ஆறாய் நீர் வழிகிறது. மாயனின் இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொண்டு வந்து அவள் பக்கம் விடுகின்றனர். அவை சோகம் புரிந்தோ, புரியாமலோ வீரிட்டுச் கத்துகின்றன.

ஒரு தடவை அவர் உயிர்ப் பாம்பைக் கழுத்தில் போட்டுச் கொண்டு வந்தார். அவந்திகாவுக்கு ஆத்திரம் வந்தது.

“என்ன ஆாமி இது? குழந்தை பயப்படமாட்டாளா?” என்று கடிந்து அவளைப் பற்றிச் செல்ல முயன்றாள்.

“ஒன்றும் ஆகாது. அஞ்சாதே. குழந்தாய்... இதோ பார், இது உனக்கு நண்பர்... தொடு...” என்று அவள் பூங்கரம் பற்றி அதைத் தொடச் செய்தார். அது பூவைப் போல் குளிர்ச்சியாக இருந்தது ‘இன்னும் இன்னும் இன்னும்... என்று தலையோடு வால் பூங்கரத்தால் தடவிக் கொடுத்தாளே?...

அந்நாள் கானகத்தில் தன்னந்தனியளாய் அவள் வந்து விழுந்த போது, நாகங்கள் வந்து வரவேற்றதை எண்ணிக் கண்ணீர் பொங்குகிறது.

“அத பாருங்க! பாம்பெல்லாம்...”

அந்த வனமே சோகத்திலிருக்கிறது. ஊர்வன, பறப்பன. நடப்பன ஆகிய அனைத்து உயிர்களுக்கும் தோழனாக ஓம் ஓம் என்று ஒலிக்கும் தம்புருடன் இதம் செய்தவர். அந்த இசைக்கருவி நாதனை இழந்துவிட்டது. பகல் உச்சிக்கு ஏறி இறங்கத் தொடங்குகிறது. அவர் வீழ்ந்த இடம், மரமல்லிகைகள் சொரியும் அரண் பூச்சிக்காட்டையும், வாழை வனங்களையும் பிரிப்பது போல் அரணாக நிற்கும் மரங்கள். உச்சிக்கு ஏறிய ஆதவன் திடீரென்று குளிர்ந்தாற்போல் சாரல் வீசுகிறது. அந்த வேனிலில், சரேலென்று ஒரு சாரல் விசிற, வானவன் அவர் பொன்மேனியை நீராட்டுவதுபோல் குளிர் பூஞ்சாரலாகப் பொழிகிறாள். இத்தகைய சாரல் வந்தாலே மரமல்லிகை பொல்லென்று மனம் சொரிந்து அவனியை அலங்கரிக்கும் நந்தமுனியை இயற்கை நீராட்டி அலங்கரிக்கிறது...