பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

247

“குழந்தைகளா, அம்மா சொல்லித்தான் நாதியம்மாவை வந்து பார்ப்பீர்களா?” அவர்களை அருகில் வைத்து, தழுவி உச்சி மேர்ந்து கண்ணிர் சொரிகிறாள் பெரியன்னை

சூடு செய்த நீர் சிறிது கொண்டுவந்து பிள்ளைகளிடம் தருகிறாள் பூமை மிதுனபுரியில் இருந்து நந்தசுவாமி வாங்கி வந்த மரக்குடுவையில் வெதுவெதுப்பான நீரை, பிள்ளைகள் வாங்கி, அவளை அருந்தச் செய்கின்றனர்.

ஒமப்புல்லின் வாசனை.

நிறைவுணர்வுடன் அருந்துகிறாள்.

“குழந்தைகளா?. நீங்கள். இந்தக் காட்டிலேயே இருப்பதை விரும்புகிறீர்களா?” அவர்கள் வியப்புடன் அவளை நோக்கு கின்றனர்.

“இந்த இடம் எங்கள் இடம்; எங்கள் அன்னையின் இடம்: நாங்கள் இங்கே இருப்பதை விரும்பாமல் எப்படி இருப்போம்.”

குடிலின் இன்னொரு புறத்தில் இதுகாறும் அமைதியாக இருந்த கேகய அன்னை, உடனே, “குழந்தைகளா, உங்கள் தந்தை, மாமன்னர் என்பது தெரியுமோ உங்களுக்கு?” என்று பருத்தி வெடித்தாற்போல் உண்மையைச் சிதற விடுகிறாள்.

அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்க்கின்றனர்.

“ராஜமாதா, என்ன சொல்கிறார்?.”

“குழந்தைகளா, நான் உங்களுக்கு ராஜமாதா இல்லை; உங்கள் பாட்டி. நீங்கள் ஆசையோடு நாதியம்மா என்றழைக்க வேண்டியவள். இங்கே வாருங்கள்.”

அவர்கள் திகைத்து நிற்கையில் பூமகள் தலைகுனிந்து மவுனம் சாதிக்கிறாள். “பூமகளே, ஏன் மவுனம் சாதிக்கிறாய்? எத்தனை நாட்களுக்கு இப்படி ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம் கண்ணாமூச்சி ஆட முடியும்? ஊர் அபவாதம் என்று உனக்கு பெரும்பாதகம் செய்துவிட்ட உன் நாயகனைப் பற்றிய உண்மையை இந்தப் பிள்ளைகளும் தெரிந்து கொள்ளட்டும்!