பக்கம்:வரதன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வரதன் என்னும் பேச்சுக்களே அங்குள்ள எல்லோரிடத்தும் குடிகொண்டிருந்தன. போலீஸ்காரர்கள், அந்தக் கரி வேடக்காரர்களுக்கு உதையும், குத்தும் கொடுத்து அவர் கள் வாய்ப்பிறப்பைத் தெரிந்துகொள்ளுவதிலேயே முனைந்து நின்றனர். வரதன் அன்னைக்கு அழுகையும் துக் கமும் அதிகரித்தனவேயன்றிக் குறைந்தபாடில்லை. கண் ணனும் முருகனுங்கூட அமுலாயினர். அங்கு வந்திருந்த பிள்ளைகளிலும் அநேகர், தம் கண்களில் நீர்வடித்தனர். பாடசாலை ஆசிரியரில் ஒருவர், ! வெளியூரிலுள்ள சுற்றத் தாருக்கு எதற்கும் தந்திகொடுத்துப் பார்த்தல் நலமே என்றனர். கந்தன் அவ்விதமே தந்தி கொடுப்பதற்கு விரைந்து ஓடினன். காலே மணி எட்டுக்குமேல் ஆகிவிட்டது , ஒன்ப தும் அடித்தது. அவ்வளவு நேரமாகியும் வரதன் காணப் படவில்லை. ஆனாலும், அக்கம்பக்கத்தார் அதன் பொருட் டுத் தத்தம் வேலேகளைக் கவனியாமல் இருப்பார்களா ? அவர்களுள் அநேகர் அங்கிருந்து ஒவ்வொருவராக கழுவ லாயினர். மணி ஒன்பதரை இருக்கலாம். அப்போது பெரி யோரிற் பலர், தத்தம் வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். பெண்களிலும் சிலர் வருவதும் போவதுமாய் இருந்தனர். பாடசாலைக்குச் செல்லவேண்டிய பிள்ளைகளெல்லாம், தங்கள் புத்தகம் பலகைகளோடு வரதன் வீட்டுத் தெருவி லேயே சுற்றிக்கொண்டிருந்தனர். மணி பத்தடிக்கும் சமயம். ஆதலால், அங்குள்ள பிள்ளைகளில் பெரும்பாலோர் பாடசாலைக்குச் சென்று விட்டார்கள். கண்ணனும் முருகனும் அன்று பாடசா லேக்குச் செல்லவேயில்லை. அவ்வளவுதான ? அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/67&oldid=891206" இலிருந்து மீள்விக்கப்பட்டது