பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வரலாற்றுக்கு முன்


கொள்ளுகின்றனர்[1]. அக் காலத்தில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்—வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும்—அந்த ஆரியரினும் பல வகையினும் வேறுபட்ட ஓரினத்திார்—திராவிடர்—சிறக்க வாழ்ந்திருந்தனர்[2]. அதை வலியுறுத்தும் வகையில் இன்றும் மேற்கே பலுசிஸ்தானந்திலும், கிழக்கே அசாம் மலைப் பகுதிகளிலும், மத்திய இந்தியாவில் சாத்பூரா மலைப் பகுதிகளிலும் திராவிட மொழிகளைப் பேசும் மக்களும், திருந்தாத திராவிட மொழிகளும் திகழ்ந்து வருகின்றன என்பதைக் கால்டுவெல் அறிஞரும் பிறரும் உலகுக்கு நன்றாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். எனவே, ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தே இந்நிலப்பகுதி முழுதும் பரவியிருந்த மக்கள் இன்று தென்னாட்டில் வாழும் திராவிட இன மக்களின் முன்னோரே என்பது தேற்றம். வேதகால இந்தியா[3]’ என்னும் நூலின் எட்டாவது கட்டுரையில் திரு S.K. சட்டர்ஜி, M.A.,D.Litt என்பார், அந்தக் காலத்தில் ஆரிய மொழியால் திராவிட மொழி அமைப்புக்களும் சொற்றொடர்களும் கலந்து அந்தப் புது மொழியை வளர்க்க உதவின என்பதைத் திட்டமாகப் பல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குகின்றார்[4]. பூசை என்ற சொல்லை அவர் திராவிட மொழிச் சொல் என்றே நிறுவுகின்றார். பூக் கொண்டு செய்யப்படுவது பூசையாகும். (பூ + செய் = பூசெய்: பூசை) அப்படியே ஆண்+மந்தி என்ற இரு


  1. The Vedic Age, Vol. I. p. 154.
  2. But there is evidence, both indirect and direct, that in Central India, in North India, in Western lndia and possibly also in Eastern India,Dravidian was one time fairly widespread (The Vedic India, Edited by R.G. Majumdar, Vol. I р. 55).
  3. The Vedic lndia, pp, 154-158,
  4. Ibid. p. 160