உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வரலாற்றுக்கு முன்


குரியது. இவ்வருணன் ஆரியரின் நான்கு கடவுளரில் ஒருவனென எண்ணப்படுகின்றான். எனினும், அவர்களின் பெயர்களைப் பற்றி ஆராயும் திரு. கோஷ்[1] அவர்கள் அப்பெயர்கள் ஆரியர்தம் பெயர்களோ அன்றி மத்திய மேற்கு ஆசியாவிலிருந்து கடன் வாங்கியவையோ என ஐயுறுவதோடு, அவர்தம் மொழி பலவற்றிலிருந்து கடன் வாங்கி வளர்க்கப்பட்டதே என்பதையும் விளக்குகிறார்[2]. எனவே, வெறும் பெயர் மட்டும் கொண்டு அக்கடவுளரைப் பற்றி முடிவு செய்ய இயலாது. அன்றியும், அக்காலத்தில் ஆரியர் இங்கு வந்தமையின் அவர்கள் வழங்கிய பெயரைத்தான் தம் கடற்றெய்வத்திற்கு இட்டார்களோ என எண்ணுபவரும் உள்ளனர்.

நீர்த்தெய்வத்தைப் பற்றி மற்றொன்றும் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. சிந்துவெளி நாகரிகத்திலேயே நீரைத் தெய்வமாகப் போற்றினார்கள் என்பதைத் திட்டவட்டமாக ஜான் மார்ஷல் என்பார் கூறுகின்றார்[3] . எனவே, ஆரியர்களுக்கு முன்னரே இந்நாட்டில் உள்ளவர் நீர்த் தெய்வத்தை—வருணனை—கடற்கடவுளை-வணங்கி வந்துள்ளார்கள் என்பது புலனாகும். தொல்காப்பியர் அதைத்தான் இங்கு இவ்வாறு கூறியிருக்க வேண்டும். பல வழக்குகள் இரு மொழிகளிலும் வெவ்வேறு பெயர்களின் அடிப்படையில் காண்கின்றபடி இவ்வருணனும் தமிழிலும் ஆரிய மொழியிலும் அதே பெயரில் வழங்கப் பட்டானோ என எண்ணுவதும் தவறாகாதே!

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்மொழி வழங்கும் எல்லை 'வடவேங்கம் தென்குமரி' இடைப்பட்டதாகவே அமைந்துவிட்டது. இமயம் வரையில் போர்மேற்சென்று


  1. B. K. Ghosh, D. Phil (Munich), D. Litt. (Paris)
  2. The Vedic India, p. 204.
  3. Indus Civillzation, p. 75.