நந்தரும் மெளரியரும்
165
சந்திரகுப்தரின் மண்ணாசை அத்துடன் அமையவில்லை இந்திய நாடு முழுவதையும் அவர் தம் ஆணையின்கீழ்க் கொண்டுவரத் திட்டமிட்டார். எனினும், அவர் தம் விருப்பத்தை முழுதும் நிறைவேற்ற இயலவில்லை. தெற்கே உள்ள ஆந்திரரும் தமிழரும் அவரது படையை உள்ளே அனுமதிக்கவில்லை. அவருடைய ஆட்சியின் எல்லைகள் கிழக்கே கலிங்கநாடு (ஒரிசா) வரையிலும், மேற்கே வடக்கு மைசூர்ப் பகுதி வரையிலும் அமைந்துவிட்டன. என்றாலும், அவர் குமரி வரையில் தம் படையைச் செலுத்தத் திட்டமிட்டார்[1]. அதற்குக் காரணம் இரண்டு: ஒன்று, நாட்டு ஆசை; எப்படியும் பரந்த இந்தியா முழுவதையும் தம் ஆணையின் கீழ்க் கொண்டு வரவேண்டுமென்பது; மற்றொன்று, தமிழ் வேந்தர்கள் தனது பகைவர்களாகிய நந்தர்களுக்கு நண்பர்களாய் இருந்ததோடு அவர்கள் புகழை பாடத் தமிழ்ப் புலவர்களையும் அனுமதித்ததாகும். எனவே, எப்படியாவது தமிழ் நாட்டு வேந்தரைத் தாக்க வாய்ப்பை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார் சந்திரகுப்தர். ஆம்! அந்த வாய்ப்பும் கிட்டியது. தமிழ் நாட்டு மன்னரோடு கலந்து வாழ்ந்த கோசர், எக்காரணத்தாலோ மோகூர் அரசனுடன் மாறுபட்டனர் போலும்! அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. எனவே, அவர்கள் சந்திரகுப்தரைத் துணைக்கு அழைத்தார்கள். அவரும் பொதியம் வரையில் வந்து சென்றனர். ஆந்திரநாடு வழியாக வர இயலாத அவர் கொங்கணிப்பாதை வழியாக, மைசூர் எல்லையிற் புகுந்து, அதில் சில பகுதிகளைக் கொண்டு, அப்படியே தமிழ்நாட்டில் புகுந்தனர் எனக் காட்டுகின்றார் பானர்ஜி அவர்கள்[2] மைசூர்க் கல்வெட்டு ஒன்றும் சந்திரகுப்தர் தென்னாட்டுப்