உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வரலாற்றுக்கு முன்



இவ்வாறு கோசருக்காக வடக்கே பாடலியில் வாழ்ந்து மைசூர் வரை ஆண்ட சந்திரகுப்தர் தமிழ் நாட்டின்மேல் படை எடுத்தார் என்பது முழுதும் பொய் என்று அறிஞர் சிலர் துணிந்து எழுதுகின்றனர். எனவே, அவர்தம் கருத்துப் பற்றி ஆராய்ந்து, அக்கருத்தும், அதற்கு அவர் காட்டும் சான்றுகளும் பொருத்தமற்றவை என்று எடுத்துக்காட்ட வேண்டுவதும் நம் கடமையன்றோ? அவர்கள் மோரியர் என்ற சொல்லே சந்திரகுப்த மெளரியரையோ, அவர் பரம்பரையையோ குறியாது என்பர். அதற்கு அவர்கள் காட்டும் சான்று, புறம். 175ஆம் பாட்டுக்கு உரையாசிரியர் எழுதிய உரையாகும். அதில் உரையாசிரியர் மோரியர் என்ற சொல்லுக்கு 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனக் குறித்துள்ளாராம். அதைக் கொண்டு, மோரியர் ஒர் இனமாயின், அதைக் குறியாது இப்படிப் பொதுப்பட எழுதுவாரா எனக் காட்டி, எனவே மோரியர் என்ற சொல். ஒரியராகத்தான் இருக்கவேண்டும் என வாதிடுவர். 'ஒரியர்' என்ற சொல், ஊலி' என்ற சொல்லை முதலாகக் கொண்டது என்றும், அதற்கு அகன்ற நிலப்பரப்பை உடையது' என்றபொருள் உண்டு என்றும் காட்டி, அந்த வட சொல்லே இங்கு எடுத்தாளப்பெறுவது என்பர். இது பொருந்துமா? புறநானூற்று உரையாசிரியர் அவர் காலத்தில் வழங்கிய எம்முறை கொண்டு அத்தொடருக்கு இப்பொருள் கொண்டாரோ யாமறியோம்! எனினும், அவர் கொண்ட அதே பொருளிலும் இழுக்கு ஒன்றும் இல்லையல்லவா? ஒரு சிறு பகுதியாகிய தமிழ் நாட்டை மூன்று பிரிவுகளாகக் கொண்டதோடு, இவற்றுக்குள்ளும் சிறுசிறு அரசுகளை அமைத்துக்கொண்டு அடிப்படுத்தி ஆளும் இந்த நிலை நோக்க, இமயம் முதல் மைசூர் வரை ஆண்ட மன்னர் பெருநிலப் பரப்பை உடையவர் என்று கொள்ளுதல், தவறில்லையே! மற்றும் இந்திய வரலாற்றிலேயே, வரலாற்று எல்லைக்கு உட்பட்ட காலத்தில் முதல் முதல் இத்துணைப் பரந்த நிலப்பரப்பைக் கொண்டு ஆண்ட