36
வரலாற்றுக்கு முன்
இன்னும், இவ்விராமாவதாரத்தைப் பற்றியும் வேறு பல அவதாரங்களைப் பற்றியும் கூறும் சங்க இலக்கியங்கள் பலவாகும்.
..........-'வடா அது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மாஅல் போல’ (அகம். 59)
என்றும்,
வண்டுஅடைந்த கண்ணி வளர்ஆய்ச்சி வாள் நெடுங்கண்
சென்றடைந்த நோக்கம் இனிப்பெறுவ தென்றுகொல்
கன்றுஎடுத்து ஒச்சிக் கனிவிளவின் காய்உகுத்துக்
குன்றெடுத்து கின்ற நிலை!
(முல்லைப்பாட்டு, இறுதி)
என்றும்,
'கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரிசினம் கொன்றாய்' (பரிபாடல், 3:31,32)
என்றும் கண்ணனுடைய திருவவதாரத்தை விளக்கிக் காட்டுகின்றன. சங்கப் பாடல்கள். மற்றும்,
"ஞாலம்மூன்று அடித்தாய முதல்வற்கு முதுமுறைப்
பால்அன்ன மேனியான் அணிபெறத் தைஇய
நீலநீர் உடைபோல' (கலி. 124: 1.3)
என்றும் ,
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல' (முல்லைப் .1.3)
என்றும்,