உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இமயமும் குமரியும்

63



நிலந்தரு திருவின் பாண்டியன் இடைச்சங்க காலத்திருந்தவன். அவன் காலத்திலேதான் தொல்காப்பியம் அரங்கேறிற்று என்று தொல்காப்பியப் பாயிரம் நன்கு காட்டுகின்றது. தொல்காப்பியர்,

'நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி'த்
                              
(தொல். பாயிரம், 9. 12)

தம் தொல்காப்பியத்தை நிறைவேற்றினர். இதில் வரும் நான்மறை என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் நன்கு விளக்கம் தருகின்றார். எனவே, தொல்காப்பியம் பாண்டியன் அவைக்களத்து நிறைவேறிற்று எனக் கொள்ளல் பொருந்தும். தொல்காப்பியம் கபாடபுரத்து இருந்த இடைச்சங்க நூலென இறையனார் களவியல் உரை குறிக்கின்றது. எனினும், தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுக்குமுன் கொண்டு செல்ல முடியாது எனச் சிலர் வாதிடுகின்றனர். சிலர் அஃது ஐயாயிரமாண்டுகளுக்கு முற்பட்டதென்பர். பின்னவர் கூற்றுப்படி பார்ப்பின், மேலே நாம் கண்ட அந்தரத்தில் மனு உண்டான 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊழிக்குமுன் அவர் வாழ்ந்ததாகக் கொள்ளலாம். இக்கொள்கை இன்னும் நன்கு ஆராய்தற்குரியது.

நிலந்தருதிருவின் நெடியோன் காலத்தில் பஃறுளி ஆறு இருந்ததென்பதே நமக்கு இங்குத் தேவை அவனை நேராகப் பாராட்டிய புலவர் இவர். புலவரைப் போற்றும் நெடுஞ்செழியனைப் பாடவந்த மருதனாருக்கு அந்நெடியோன் பண்பும் தொல்லாணை நல்லாசிரியர் கூட்டுறவும் நினைவுக்கு வரவே, அவனைக் காட்டி, அவனைப்போல வாழ்க என்றார்! அவனுடன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியையும் பிணைத்தார். முதுகுடு மியைப் பாட