சிந்து வெளியும் தென்னாடும்
8
தெடுக்கப் பெற்றவேறு சில இடங்களும்[1] விளக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கின்றார்; சிறப்பாகப் பெண்கள் வளை அணிவதையும், அவை சங்கால் ஆகியதையும் குறிப்பிடுகின்றார். பரந்த கடற்பரப்பை எல்லையாக உடைய தமிழ் மக்கள் கடலிலிருந்து சங்குகளை எடுத்து விதம் விதமான வளைகளைச் செய்து அவற்றை அணிந்திருந்தார்கள் என்பதை நம் சங்க இலக்கியங்களிலும் காண்கின்றோம். சங்குக்கே 'வளை' என்பது பெயர். பெண்கள் இச்சங்கை வளையல்களாக அறுத்து அணிந்துகொண்டார்கள் என்று கூறுவதே பொருத்தமாகும். தமிழ் நாட்டில் இந்தச் சங்குகளை அறுப்பதற்கெனவே ஒரு குலம் இருந்ததென்பதையும் அக்குலமே நக்கீரர் குலம் எனக் கூறப்படுவதையும் நாம் அறிவோம். கடல் படு முத்தும் சங்கும் பவளமும் தமிழர் தம் சிறந்த அணிகலன்களல்லவோ? ஆம்! இந்தச் சங்கு வளையல்களே சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவற்றைச் சான்றாகக் கொண்டே அதைத் திராவிட நாகரிகமெனக் காட்ட இயலும் என்கின்றனர் அறிஞர்.[2] மற்றும், பெண்கள் கொண்டையில் மலர்களையும் தழைகளையும் அணிந்திருந்த சிறப்பும்,[3] பல இலிங்கங்களின் அமைப்புக்களும்,[4] முத்துச்சிப்பிகளின் அமைப்புக்களும்,[5] தமிழ் நாட்டுக் குத்து விளக்கைப் போன்று நான்கு முகமுடைய விளக்குகளும்,[6] கோயில் அமைப்புக்களும் அவற்றின் நகைகளும்,[7] நகைகளைக் கோத்து வைத்துள்ள