பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 கூறித் தங்கவைத்துவிட்டனர். காலையிலெழுந்த அத் தில்லை வாசிக்குத் தன் கண்களையே நம்ப முடியாத ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. புதுப்பானையிலிட்ட அஸ்திகள் யாவும் பூக்களாக மாறி நறுமணம் பரப்புவதைக் கண்டு யாவரும் பிரமித்தனர். அதுமாத்திரமன்று: அஸ்தி குலுங்கிய பானையை யேந்தி, ஊர் எல்லையைத் தாண்டியதுமே பூக்களும் மணத்துடன் மறைந்தன. இத் தல விசேடத்தால் இது நிகழ்ந்தது என உணர்ந்த அப் பெரியார் அலுவல் முடிந்து ஊர் திரும்பியதும் முதல் காரியமாக இத்தலத்தே தன் இஷ்ட தெய்வமான அம்பல வாணரையும் சிவகாமியையும் தாபித்தனராம். இதை நிரூபிக்க அர்ச்சகர் தன் நினைவுக் கெட்டிய் காலத்தில் மூலவரைச் சிதம்பரரேசர் என்றே அர்ச்சிப்பது வழக்கம் என்றும் கூறுகிறார். அங்கம் பூத்ததனால் அங்கம் பாக்கம் எனப் பெயர் கொண்டது இவ்வூர். தில்லைக்காரரால் தாபிக்கப்பட்டதால் இந்த அம்பல வாணரும் சிவகாமி அம்மையும் தனிப் பெருமை கொண்டனர். முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும் வீற்றி ருக்கும் நடராசப் பெருமானுக்குத் திருவாதிரை தினத் தன்று திருமஞ்சனமாட்ட தில்லை அந்தணர்களைக் கூப்பிடுவது வழக்கமாயிருந்தது. ஒரே தினம் திருமேனி யைத் தீண்டுவதே சிறப்பென்றால் அத் திருமேனியையே தாபித்தல் எத்துணை சிறப்பாகும். ஊரும் பேரும் செங்கல்பட்டிலிருந்து பாலாற்றை யொட்டி காஞ்சி செல்லும் சாலையில் வாலாஜாபாத்தில் இறங்கி எதிரே யுள்ள பாலாற்றைக் கடந்தால் இவ்வூரை அடையலாம். ஆற்றின் பரப்பை நிரப்புவது நீரல்ல; மணல் தான். ஊரை யொட்டி சிறு பாம்பு நெளிவதுபோல் சன்னமாய்ப் பாயும் ஊற்று, கரை மருங்கில் அகலமும் ஏற்ற உயரமும் கொண்டு சலசலக்கும் அரசமரங்கள், நிழல் பிடிக்க