பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அன்னையை முன்னிறுத்தி அம்பலவாணனைப் போற்றும் இப்பாடல்கள் பயில்வார்க்குப் பயன் தருவன. நூலில் குறித்தபடி ஒரு காலத்தில் வளமுற்று வாழ்ந்த இவ்வூர் இன்று தன் நிலையில் தாழ்ந்துள்ளது. சோழர் காலத்தும் பிற்காலத்தும் கட்டப் பெற்ற கோயில்கள் இன்றும் உள்ளன. இவற்றைப் பற்றித் தினமணியில் வந்த கட்டுரையினையும் தில்லையின் கும்பாபிடேக மலரில் நான் எழுதிய கட்டுரையினையும் முதலில் இணைத்துள்ளேன். அவற்றின் வழியே இவ்வூரின் தொன்மையும் தொண்டும் பிறவும் புலன்ாகும். கோயிலைச் செம்மையாக வைத்திருக்க வேண்டிய அளவிற்குப் போதுமான வருவாய் உடையதாக இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் இதன் பராமரிப்பு குறைந் துள்ளமை எண்ணத்தக்கது. இந்து சமய அறநிலையத் தினரும் அதன் வழியே செயலாற்றும் தக்காரும் குறை நீக்கி நலம் காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளு கிறேன். இக்கோயிலுக்கு என் முன்னோர்கள் - மூன்று தலை முறைகளுக்கு மேலாக,'பல மானியங்கள் விட்டு, இதன் நலம் காத்துள்ளனர். நான் இவ்வூரை விட்டே அரை நூற்றாண்டுக்கு முன் சென்றுவிட்டேனாயினும் அடிக்கடி வந்து அம்பலவாணரையும் அன்னை சிவகாமியையும் வணங்கும் பேறு பெற்றுள்ளேன். அந்த அடிப்படையிலேயே இந்த நூலும் இன்று இங்கு - அம்பலவுர் திருக்கோயிலில் - வெளி வருகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியப் பணி இயற்றி, ஒய்வு பெற்றபின் என் அன்னையின் பெயரால் சென்னை, அண்ணா நகரில் அறநிலையம் அமைத்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் பயிலும் பள்ளிகளை நடத்தி வருகின்றேன். எனினும் நான் பிறந்த இவ்வூரின்பால் பற்றும் பாசமும் உடையவன்