பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆதலாலே இவ்வூர் பற்றிய மறைந்ததெனத் தக்க இந் நூலை இன்று வெளியிட முனைந்தேன். தினமணிச்சுடரில் கூறியபடி என்னை ஈன்ற அன்னையின் அருளும் உலகன்னை யாகிய சிவகாமியின் அருள் நோக்கும் அமைய இந்நூல் வெளிவருகிறது. இந்த நூலும் எங்கள் வள்ளியம்மாள் கல்வி அறத்தின் வழியே வெளிவருகின்றது பொருத்தமாகும். இந்த மாலையின் ஒரு படியே (1900 ஆம் பதிப்பு) கிடைத்தமையின் அதைப் பத்திரப்படுத்த நினைத்தேன். அப்படியே அச்சிடத் தரின் ஏடு ஏடாகி, அழுக்குப் படிந்து கிழிந்து பொடியாகி பாழ்பட்டு விடுமே என அஞ்சினேன். என் அச்சத்தைப் போக்கும் நிலையில் இந்நூல் அச்சான கற்பகம் அச்சக மேலாளர் திரு. நாராயணன் அவர்கள் தாமே முன்வந்து பாடல்கள் அனைத்தையும் சீர்பிரித்துப் படி எடுத்து, அச்சுக்குத் தந்து, மூல நூலைக் காப்பாற்றி னார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்ட வனாவேன். இவ்வூரின் நல்லன்பர்களும் இவ்வூரின்பால் அன்புள்ள வர்களும் இக்கோயிலை ஒம்பும் அறநிலையத்தவரும் இந் நூலையேற்று, இதில் குறிக்கப் பெற்றுள்ள நலன்களையும் வளங்களையும் மீண்டும் இவ்வூர் பெறத்தக்க வழியில் ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். அம்பலவாணரின் அருளும் அன்னை சிவகாமியின் கருணை நோக்கும் அனைவருக்கும் அமைவனவாக! அங்கம்பாக்கம் பணிவுள்ள, 6-7-1986 . } அ. மு. பரமசிவானந்தம்