பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்பாக்கத்து அம்பலவாணர் (தினமணி-சுடர்) நாராயணஸ்வாமி உலகுக்கெல்லாம் தலைவன் இறைவனென்பதால் அவனை வழிபடுவது நியதியாகும். அவ்விறைவனுக்கும் மேலானது ஒன்றுண்டா என்றால் தாயினுஞ் சிறந்த தெய்வ மில்லை' என்ற பழமொழியே விடையளிக்கும். ஒருவன் புரிந்த கொடும் பிழையையும் பொறுத்துக் கொள்ளுபவர் உண்டென்றால் அவர் அவன் தாய்தான். தெய்வத்தினும் மேம்பட்டவள் தாய் என்று வழுத்தியதில் குறை ஒன்றுமில்லையே. இறைவி சிவகாமி அம்மையைத் தோத்தரிக்க முயன்றார் குமரகுருபரர். அவருக்குப் புலப் பட்ட்து ஒரு தாயின் பாசந்தான். அக்கருத்தை அடக்கி அப்படியே பாட்டாக உதிர்த்து விட்டார். அந்தப் பாடல்,

  • பாலுண் குழவி பசுங்குடர் பொறாது என

நோயுண் மருந்து தாயுண் டாங்கு மன்னுயிர்த் தகுதிக்குத் தன் அருள் கிடைப்ப' என்பதுதான். தன் சிறு குழவி நோய்வாய்ப்பட்டு அல்லலுறும்பொழுது தாயின் நிலை என்ன? மருந்தின் காரத்தைச் சின்னஞ்சிறு குழந்தை தாங்குமா என்ற அச்சத்தால், தானே அக் காரங்களை உட்கொண்டு அதன் உக்கிரத்தை முறித்து ஸ்தன்யபானமாக வல்லவோ புகட்டுகிறாள். மானிடத் தாயின் நிலையே இவ்வாறாயின்