பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வருங்கால மானிட சமுதாயம்



ஏனைய தேயங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் தலைவிதியை எந்த வொரு நாடும் வரலாற்று முறையில் பெற்றிருக்கவில்லை என்பதற்கோர் கண் கண்ட சான்றினை பொதுவுடைமை வழங்குகின்றது

ஆனால், முதலாளியக் கால கட்டத்தை இன்னும் கடக்காத நாட்டு மக்களுக்கு முதலாளியமற்ற வளர்ச்சிப் பாதை வழி திறந்திருக்கிறதா?

மங்கோலிய மக்கள் குடியரசின் பட்டறிவும் சோவியத்து நடு ஆசிய மக்களின் நுகர்வறிவும் அந்த வழிதிறந்திருப்பது நடக்கக் கூடியதே என்பதைக் காட்கின்றன.

புதிய வளர்ச்சிப் பாதையை மேற்கொண்டுள்ள மக்களுக்கு உலக சமன்மை அமைப்பு கணிசமாக உதவி வருகிறது; அந்த மக்கள் தெள்ளத் தெளிவான குறிக்கோளைப் பெற்றிருந்தால், ஒரு சிறந்த எதிர் காலத்தை உருவாக்க முழுமூச்சோடுபாடுபட அணியமாக இருந்தால், அவர்கள் பொதுவுடைமையை நோக்கிச் செல்லும் தமது பாதையில் முதலாளியக் கால கட்டத்தை எய்தாமலே அதனைத் தாண்டி முன்னேறுவதற்கு உலக சமன்மை அமைப்பு அவர்களுக்கு உதவுகின்றது.

பெருவலிமை படைத்த சமன்மைக் கூட்டுக் குடும்பம் விடுதலைக்காகப் போராடும் அனைத்து மக்களின் நலன்களையும் பாதுகாத்து நிற்கிறது;அந்த குறிக்கோள் உறுதியாய் எய்தப்படும் என்பதற்கோர் உண்மையான நம்பிக்கையாகத் திகழ்கிறது.