பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

101


சரக்காக மாற்றுகிறது, மனிதனையே மதிப்புள்ள அல்லது மதிப்பற்ற பொருளாகவும் மாற்றி விடுகிறது என்பதுதான்.

முதலாளிய சமுதாயம் கோடான கோடி மக்களின் அதாவது உலக மக்கள் தொகையிற் பெரும் பான்மையோரின் மகிழ்ச்சிக்கான நிலைமைகளை வழங்கவில்லை. எனவே தனி ஒருவர். பொதுவாகச் சமுதாயம் முழுவதற்கும் பகைவனானவன் என்று அடித்துக் கூறுவதைத் தவிர முதலாளிய கோட்பாட்டாளர்களுக்கு வேறு வழியில்லை. மாந்த மதிப்பாண்மையும் மகிழ்ச்சியும் மாந்தனின் சமுதாய நடவடிக்கைகளோடு, எந்தச் தொடர்பு அற்ற தன்மானத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததாகக் கூறப்பட்டது. எனவே மாந்தன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமெனில் அவன் சமுதாயத்தில்தான் ஓர் உறுப்பினன் என்பதை மறந்துவிட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மாந்தன் தன்னைத் தானே சமுதாயத்திலிருந்து பிரித்துக் கொள்ள முடியாத கார்ணத்தால் அவனது மதிப்பாண்மை, உரிமை, மகிழ்ச்சி ஆகியவெல்லாம். வெறுங் கற்பனையைத் தவிர வேறாக இல்லை.

மாந்தன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டு மெனில் அவன் தனது திறமைகளை பெருக்கம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும் என்பது உண்மை. எனினும் நடைமுறை வாழ்வில் மாந்தனது திறமைகள் அவனது நடவடிக்கைகளின் வளர்ச்சிப் போக்கில் மட்டுமே பெருக்கமடைகின்றன; அந்த நட்வடிக்கைகளும் திட்டவட்டமான சமுதாய விளைவுகளைக் கொண்டவையேயாகும். மாந்தனது அகப் பண்பின் வளமும் மகிழ்ச்சியும் அவனது சமுதாய நடவடிக்கையோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளன. தனது நடவடிக்கைகள் மக்களுக்கு தேவையாக இருக்கும் பொழுதே, சமுதாயத்துக்குத் தேவைப்படும் பொழுதே, மாந்தன் மகிழ்ச்சி பெறுகிறான்.