பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வருங்கால மானிட சமுதாயம்



முழுநிறை மகிழ்ச்சி என்பது குடும்பத்தையும் நல்ல வாழ்க்கை நிலைமைகளையும் பெற்று, நட்புறவில் மகிழ்ந்து வாழ்வதுதான் என்பது உறுதி. தனக்குரிய நல்வாழ்வைப் பற்றிய அக்கறை முற்றிலும் இயல்பானதே, அதனைப் புறக்கணித்து விடக்கூடாது என்று உரோமய்ன் ரோலந்த் கூறியுள்ளார். ஆனால் ஒருவர் இதில் மட்டுமே முழு மனத்தையும் செலுத்தி, சமுதாய நல்வாழ்வையும் மாந்த சமுதாயம் முழுவதையும் பாதுகாப்பதை புறக்கணிப்பாரானால் அவரது வாழ்க்கை மானக்கேடாகவும் வெறுமையாகவும் பயனற்றதாகவும் போய்விடுகிறது.

சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரின் படைப்பாற்றல்களின் வளர்ச்சியின்றேல், உயிர்மச் செல்வம், தூய நல்லொழுக்கம், முழுமையான உடல் நலம் ஆகியவற்றின் இசைவான வாழ்க்கையின்றேல், பொதுவுடைமையை எண்ணிப் பார்க்கக்கூட முடியாது. பொதுவுடைமை அவரவர் திறமைக்கேற்ப உழைக்க வேண்டும் எனக் கூறுகிறது. மறு புறத்தில் உழைக்கும் உரிமையை உறுதி செய்வது, வறுமையைப் பொக்குவது, போர்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது, அனைத்து மக்களுக்கும் சமன்மையை, (சமமான சொத்துரிமைகளை அதனை அடுத்து ஒவ்வொருவர் தேவைகளையும் முழுமையாய் நிறைவு செய்வதற்கான சம வாய்ப்புகளை) உறுதி செய்வது ஆகியவற்றின் மூலம், மனிதனின் அகப்பண்பின் வளர்ச்சிக்கும் சகல மக்களின் முழுநிறைவான மகிழ்ச்சிக்கும் தேவையான அனைத்து நிலைமைகளையும் பொதுவுடைமை உருவாக்குகின்றது. (பல்வேறு மக்களிடம் பல்வேறு வகையாய்த் தென்படும்) ஒவ்வொரு மனிதரது திறமைகளை வளர்ப்பதும் பொதுவுடைமைக்குத் தேவைப்படுவதால் அது இந்தத் திறமைகள் அனைத்தின் அனைத்துநிலை வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்குகின்ற காரணத்தால்,