பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வருங்கால மானிட சமுதாயம்


பழங்காலத்தைப் "பொற்காலம்" என்றும், "இயற்கை அறம்" நிலவிய காலம் என்றும் கருதினார். ஆனால், மாப்லியைப்போல் எதிர்காலம் பற்றி தோல்வியுணர்வு கொள்ளலாம், மோரெல்லி எதிர் காலத்தில் தன்னம்பிக்கை கொண்டவராக விளங்கினார். மாந்தனது "இயற்கை அறத்தின் முறைகளை மீட்டுக் கொண்டுவர, சட்டங்கள் மாந்த குலத்துக்கு உதவ முடியும்" என்று அவர் நம்பினார். இதற்குச் சான்றாக "சொத்துடைமையையும் தனியார் நலனையும்:"ஒழித்தாக வேண்டும். மோரெல்லியின் எதிர்கால பொதுவுடைமைச் சமுதாயம் அதன் சமுதாய உடையை நிறுவனத்தால் குறிப்பிடத்தக்க சிறப்பைப்பெற்றது. சமுதாயம் முழுவதன் நல்வாழ்வுதான் ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான நிலைமைகளையும் உறுதிப்படுத்த முடியும் என அவர் நம்பினார் உழைப்பு ஒவ்வொரு பிரஜையின் உரிமையாகும்; கடமையாகும்; அவரது சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்குமான உரிமை உத்தரவாதம் செய்யப்பட்டிருந்தது; பகிர்வளிப்பு மக்களது தேவைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது; அறிவியல் வளர்ச்சிக்குத் துணையான நிலைமை அவரது சமுதாயத்தில் உருவாக்கப்பட்டிருந்தன

கனவுலக சமன்மையின் முழுநிறைவான கொள்கைகள் 19ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளின்போதுதான் உருவாயின. இங்கிலாந்தில் பொருள் ஆக்கங்களை எந்திர மயமாக்கியதால் ஏற்பட்ட பெருந்தொழில் வளர்ச்சியும் சரி, 1789-94 ஆண்டுகளின் பிரஞ்சு முதலாளியப் புரட்சியும் சரி, உழைக்கும் மக்களுக்குதவும் தீவிரமான வளர்நிலைகள் எதையும் கொண்டு வரவில்லை. மாறாக மக்கட் தொகையின் பரந்த பகுதிகள் இடையில் ஓட்டாண்டியாகும் நிலையே அதிகரித்தது. வாழ்விழந்த உழவர்கள் நகரங்களுக்கு வெள்ளம் போல் திரண்டு வந்தனர்; ஆனால்