பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

49


படுத்தும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். அம் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின. ஏனெனில் அவை அனைத்தும் வரலாற்று வளர்ச்சியை மாந்த அறிவின் வளர்ச்சியாகவும் முழுநிறைவாகவும் கருதின; இந்தக் கருத்தினால் அதனை நன்மை தீமை பற்றிய கருத்துகளின் வளர்ச்சியாகவும் கருதின; இந்தக் கருத்து வளர்ச்சியே அனைத்து வரலாற்று மாற்றங்களிலும் தீர்மானக் அம்சமாகும் என்ற கருத்தின் மூலமே அணுகித் தோற்றுப் போயின. ஆனால் அந்த அணுகல் முறையில், அறிவும் நல்லொழுக்கமும் வளர்ச்சி பெறுவதற்கான அடிப்படையைப் பற்றிய வினாக்களுக்கோ, அவை பல்வேறு காலங்களில் பல்வேறு வகையாக இருந்ததன் காரணத்துக்கோ விடை கிட்டவில்லை.

மார்க்சு இந்தக் வினாவை எழுப்பி அவற்றுக்கு விடையும் அளித்தார். மாந்தனின் வாழ்விலும், சமுதாய வளர்ச்சியிலும் அறிவுக்கும் நல்லொழுக்கத்துக்கும் உள்ள பங்கு உறுதியாய் மிகச் சிறப்பானது தான். வீட்டைக் கட்டுவதற்கு முன்னால் அதனைத் தாளில் வரைந்து பார்த்துக் கொள்ளும் நிலைகளில் இழிவான மனைச் சிற்பிகட சிறந்த தேனியைக் காட்டிலும் மேம்பட்டவன் தான், ஆனால் அவன் தனது வரைபடங்களில் புறநிலை இயல்புச் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் அவனது திட்டம் தாள் நிலைக்கு அப்பால் சிறிதும் முன்னேறப் போவதில்லை. அடிப்படையின் உறுதிப்பாடு அல்லது அந்த உறுதிப்பாட்டை உண்டாக்கும் பொருள், கட்டுமானப் பொருள்களின் தன்மை, கட்டுமானமுறை முதலிய பலவற்றையும் அவன் கருத்தில் கொள்ள வேண்டும்.

சமுதாயத்திலும் கூட, கருத்துக்களும் நல்லொழுக்கக் கோட்பாடுகளும் கொள்கைகளும் சமுதாய அமைப்பின் கட்டுமானத்தை அல்லது புனர்நிர்மாணத்தை ஊங்குவிக்க