பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

59


பொருளியல்த் தேவைக் கூறுகளை உருவாக்கியது. வகுப்புகள் ஒழிக்கப்பட வேண்டும்; அப்போதுதான்் சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம் என்பது வெறும் ஒப்புக்கென்று இல்லாமல், உண்மையான சமன்மையாக மாறும். இதற்கு, தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளிக்க உதவும் வகையில், பொருளியல் உயிர்வாழ்வுச் செல்வங்களின் மிகப்பெரு வளமும் இன்றியமையாததாகும். முதலாளியத் தின் கீழ் தொழில் நுட்ப முன்னேற்றம் பொங்கிப் பிரவகிக்காது போயிருக்குமானால் என்றுமே பொதுவுடைமையை எய்தியிருக்க முடியாது.

அறிவியல் பொதுவுடைமைக் கொள்கையின் வரலாற்றுக் பண்பானது, அது முதலாளியத்தின் கீழ் மக்களுக்கிடையே நிலவும் உறவுகளை ஒழிப்பதன் இன்றியமையாமையை மெய்ப்பித்துக் காட்டிய உண்மையிலும் அடங்கியுள்ளது. உருவாக்க கருவிகளின் தனியார் உடைமையையும், உழைக்கம் மக்களைச் சுரண்டும் வகுப்புகள் அடக்கியெடுக்குவதையும் ஒழிப்பதே. "பொற்கால"த்தைக் கொண்டுவரக்கூடிய பங்காகும்; இதனை செயின்ட் - சைமனும் கூட, கதைகள் கூறிவந்ததைப் போல் கடந்த கால பொருளாகக் கருதாமல், வருங்காலத்தில் வரப்போகும் நிகழ்ச்சி என்று சரியாகத் தான் கூறினார்.

நிலக்கிழமையை அகற்றிவிட்டு எவ்வாறு முதலாளியம் வந்ததோ, அதேபோல் முதலாளியத் திலிருந்து பொதுவுடைமைக்கு மாறுவதும் அத்தனை தேவையானதும் தருக்க முறைமையானதும் ஆகும். முதலாளிய முறை, தான்ே தோற்றுவிக்கும் விளைவாக்க ஆற்றல்களோடு, தனியார் - உடைமை பகிர்வின் குறுகிய வரம்புக்குள் இனியும் பொருந்தியிருக்க முடியாத விளைவாக்க ஆற்றல்களோடு மோதுகிறது.

எனினும் புத்தம்புதிய முதலாளித்துவம் தனது ஆக்க ஆற்றலை யெல்லாம் தீர்த்து விட்டது என்று கருதுவது