பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வருங்கால மானிட சமுதாயம்


வேற்றுமைகள் எதுவும் இருக்கவில்லை என்று "மக்கள் முதலாளிய" ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இரு சாராரும் ஆக்கத்தை பெறுவதால் இரு சாராரும் ஒரே காலத்தில் தொழில் நிலையத்தின் முதலளிகளாகவும் தொழிலாளிகளாகவும் உள்ளனர். பல இலக்கக் கணக்கான தொழிலாளர்களின் வருமானம் அவர்களுக்கு அரைவயிற்று உணவுக்குத்தான் காண்கின்ற அதே நேரத்தில், சில நூறு தனிஒரு முதலாளிகளும், கொள்ளையாகச் சம்பளம் வாங்கும் அவர்களின் அடிமைக் கூட்டங்களும் கோடானு கோடிக்கணக்கில் பணங்களைச் சுருட்டிக் கொள்கின்ற உண்மைநிலை புறக்கணிக்கப் படுகிறது. அவர்களோ, இது வெறுமனே அளவு ரீதியான வேற்றுமையே தவிர, அடிப்படையில் வேறுபட்ட பொருளில்லை எனக் கூறுகின்றனர்.

2. "அடுக்குகளாக்கல்" இந்தக் கோட்பாடு"மக்கள் முதலாளியம்" பற்றிய "ஆய்வுரை"யிலிருந்து தோன்றுகிறது, ஆக்கமும் கூலியும் பொதுவான ஒருமித்த வருமான மூலங்களாக மாறிவிட்டன என்று கூறப்படுகின்றது. இதன் விளைவாய், வகுப்புகளும் வகுப்புப் போராட்டமும் மறக்கப்பட்டுப் போயின என்றும், சமுதாய அமைப்பின் தன்மையைக் குறித்துச் சொனனால், வகுப்புகளுக்குப் மாறாக அவற்றின் இத்தைப் பெற்றுள்ள இந்தச் சமுதாய "அடுக்குகள்" ஒன்றும் முதன்மை வாய்ந்தவை அன்று என்றும் கூறப்படுகின்றது.

3. "முதலாளியத்தின் நாகரிகப் படுத்தும் தொண்டு." இந்தக் கோட்பாட்டின் கண்டுபிடிப்பாளர்கள் முதலாளியம் குடியேற்ற நாட்டு மக்களுக்கு நாகரிகம் எய்துவதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது என்றும், அதன்பின் அது அவர்களுக்குச் உரிமையும் வழங்கியது என்றும் கூறுகின்றனர்.

4. இந்தக் கோட்பாடு "சேம நல அரசு", சம வாய்ப்புகள் உள்ள சமுதாயம்" என்று என்னென்னவோ