பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வருங்கால மானிட சமுதாயம்


மாறுபடுகிறது. முதலாளியத்திலோ சமன்மை பகிர்வை உழைப்புக்கு ஏற்ப மட்டுமே வழங்குகின்றது. (முதலீடு செய்யப்பட்ட மூலமுதலுக்கு ஏற்ப ஊதியங்கள் பகிர்கிக்கப் படுவதில்லை; ஏனெனில் அதில் முதலாளிகளே இல்லை. சமன்மையின் ஊதியம் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே செல்கிறது). இரண்டாவதாக, உரிய பயன்பாட்டுக்கான பொருள்கள் மட்டுமே பகிர்கிக்கப்படுகின்றன. இதனால் விளைவாக்கக் கருவிகளின் தனியார் உடைமையைப் புதுப்பிக்கும் அனைத்து வழிவகைகளும் தவிர்க்கப்படுகின்றன. மூன்றாவதாக, ஆக்கம், பகிர்வு ஆகிய இரண்டுமே தானாக நிகழ்ந்து விடுவதில்லை; அவை மக்கள் அனைவரின் நல்வாழ்வை நோக்கி முன்னேறும் குறிக்கோளைக் கொண்ட ஒரு திட்டமிட்ட பொருளியலின் விளைவாகவே நிகழ்கின்றன.

எனவே அங்காடிச் சரக்கு - பண உறவுகளை முதலாளியச் சுரண்டல் நலன்களுக்காகப் பயன்படுத்தும் சாத்தியப்பாட்டுக்கே சமன்மையின் கீழ் இடமில்லை. அவை மக்கள் அனைவரின் நல்வாழ்வையும் மேம்படுத்தப் பயன்படுகின்றன; அதன்மூலம் வெகு மக்களின் வளர்ந்தோங்கும் முன் முயற்சியையும் படைப்பாற்றல் நடவடிக்கையையும் ஊக்குவிக்கின்றன; உழைப்பின் விளைவாக்க ஆற்றலை உயர்த்துவதிலும், விளைவாகும் பொருளின் படிநிலை விருத்தி செய்வதிலும், தேயப் பொருளியலில் மிக விரைவான வளர்ச்சியை எய்துவதிலும் ஒவ்வொரு தொழிலாளியையும் தொழில் நிலையத்தையும் அக்கறை கொள்ளச் செய்கின்றன.

சோவியத் ஒன்றியத்திலும் வேறு சில சமன்மை நாடுகளிலும் செயலாக்கப்பட்டுவரும் பொருளியல் சீர்திருத்தங்கள் அவற்றின் பொருளியல் வளர்ச்சியில் ஒரு புதிய முதன்மை வாய்ந்த நடவடிக்கையாகும்.