பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாயின், முதலாளித்துவத்தின் அரசாங்கத்தை (அரசியல் யந்திரத்தை)க்கூட எதிர்க்கவேண்டுமென்ற அரசியல் உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படுகிறது. "ஒவ்வொரு, வர்க்கப் போராட்டமும் ஒவ்வொரு அரசியல் போராட் டம்" என்று பண்டு காரல் மார்க்ஸ் கூறியது முற்ற முற்ற உண்மையென்று அவர்களுக்கு வெட்டவெளிச்சமாகிறது. அரசியல் போதம் ஏற்பட்டதும் தொழிலாளர்கள், தங் களுக்குரிய ஒரு அரசியல் கட்சிவேண்டுமென்று மனப்பூர் வமாக உணர்கிறார்கள். அதனால், அமைப்பும் அடிவலுவும் சக்தியும் பொருந்திய ஒரு அரசியல் கட்சியை உற்பவிக் கிறார்கள். முதலாளித்துவத்தை, என்றென்றைக்கு மில் லாமலொழிக்க ஆணிவேர் பக்கவேர் சல்லிவேரோடு பிடுங்கி யெறியவும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் கச் சையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்கள் புறப்படுகிறார் கள். முதலாளித்துவத்தின் சவக்குழியின் மேல், வர்க்க பேதத்தால் தாறுமாறாகப் பிரிக்கப்படாத, ஒரு பக்கத்தில் அநியாயமான லாபமும் போக போக்கியமும், மறுபக்கத் தில் அமிதமான பட்டினியுமில்லாத, வர்க்க சகிதமான ஓர் உத்தமமான சமூகத்தை கட்டுவதற்காக அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தில் இறங்குகிறார்கள். வர்க்கப் போராட்டம் இன்றோ நேற்றே தோன்றிய தல்ல. எழுதப்பட்டுக் கிடைத்துள்ள சரித்திரத்தின் ஒவ் வொரு ஏடும், வர்க்க அமைப்புகளையும் அவற்றின் நட வடிக்கைகளையும் பற்றிய கதைகளைத்தான் விவரிக்கின்றது. சமூகத்தில் வர்க்கப் பிரிவுகள் ஏற்பட்ட நாளிலிருந்து, வர்க்க ஸ்தாபனங்களும் வர்க்கப் போராட்டங்களும்