பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

11


தமிழின் கருவூலத்தைத் தேடியல்ல, நான் அக்கவிதையைக் கண்டது. என் நெஞ்சத்திரை முன்னே, இரு காட்சிகள் ஒரே சமயத்திலே நின்றன. ஒன்று சர் சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, அறிவாளிகள் சுவைக்க, மாணவர் மகிழக், கம்பீரமாக நின்று,சொற்பெருக்காற்றிய காட்சி; மற்றொன்று, தேரிலே தலைவன், அவன் உரைகேட்கும் பாகன், வரவு நோக்கி வாடிடும் தலைவி,எனும் காட்சி; இரண்டும் நின்றன!

"தேறியோருக்குத் தெளிவுரையாற்றும், சர் சண்முகத்தையும், தேரிலே அமர்ந்து பாகனை விரைந்து செலுத்தச் சொன்ன தலைவனையும், ஒருங்கே கண்டது. ஏன்?" என்பீர். கண்டேன், இதோ உம்மிடம் விண்டிடுவேன்; காரணம் சரியா, என்பதனை முடிவுசெய்யும் கடமை, எனதன்று, உமதே!

சர் சண்முகம், தென்னாட்டுத் தாகூர், இந்தியாவின் கிளாட்ஸ்டன்,என்று புகழ இழிமனமற்ற எவரும் தயங்கார்! அவருடைய அரசியல் அறிவும், தரணியறிந்த தன்மையும், தளராத்திறனும், நிர்வாக நேர்மையும், எவருமறிவர்! திராவிடமணி- மாசு இல்லை! தமிழகத்தின் நிலவு-வளர்பிறை! உன்னதமான ஊற்று, அவருடைய ஆற்றல்! ஆம்! சர் சண்முகம், ஏடெடுப்போரின் மொழிமாலையைச் சூடிட வேண்டிய பருவத்தைக் கடந்து விட்ட காவலர். கொங்குபுகழ் கோமான் மட்டுமல்ல, மங்காப்புகழைத் தமிழ்மாநிலமும், அதை அடுத்த தரணிபலவும் பரப்பி அரச அவையிலும், அறிஞர் சபையிலும், களத்திலும் கொலுமண்டபத்திலும், எங்கும் புகழ்பெற்று விளங்-